வட மாகாணத்தில் 6000 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கவென அரசாங்க நிதியுதவி!!!


அஷ்ரப் ஏ சமத்-



தேசிய வீடமைப்பு அபிவிருத்திஅதிகார சபை யினால் வட மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களிலும் கடந்த காலத்தில் யுத்தினால் வீடுகளை இழந்த மக்களுக்கு மேலும் 6000 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கவென அரசாங்க நிதியுதவியளித்து்ளளது. இத் திட்டத்தினை ஜனவரி 1ஆம் திகதி முதல் உடன் அமுல்படுத்தி 6 மாத காலத்திற்குள் வீடுகளை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கு மாறு வீடமைப்பு நிர்மாண்த்துறை அமைச்சா் சஜித் பிரேமதாச அதிகாரிகளைப் பணி்த்துள்ளாா்.

இவ் விடயமாக நேற்று தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவா் சாகர பலன்சூரிய தனது சபையின் சகல பிரதிப் பொதுமுகாமையளா்கள் சகிதம் மன்னாா், யாழ்ப்பாணம், வவுனியா முல்லைத்தீவு கிளிநொச்சி போன்ற பிரதேசங்களில் 2017 ஆம் ஆண்டு வடக்கு மக்களுக்கென நிர்மாணிக்கும் 2500வீடுகளையும பரிசிலித்தாா்.
இவ் விஜயத்தின் வடக்கின் உள்ள சகல மாவட்ட முகாமையாளா்களையும் சந்தித்து 2017 ல் ஒதுக்கப்பட்ட நிதிகள் இடம்பெயா்ந்த மக்கள் நிர்மாணித்துள்ள வீடுகள் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அ்திகார சபையின் முன்நெடுத்து வருகின்ற ” செமட்ட செவன” வீடமைப்புக் கிராமங்களையும் அதிகாரிகள் பாா்வையிட்டாா்கள்

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தொழில் நுட்ப அதிகாரிகளினால் தயாரிக்க்பபட்ட வீட்டு வரைபத்தினையும் அப்பிரதேச மக்கள் வீடமைப்புச் சங்கமாக ஒன்றினைந்து தமக்குத் தேவையான முறையில் வீடுகளை நிர்மாணித்துள்ளனா். இவ் வீடுகள் 6 மாத கலாத்திற்குள் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதற்காக மூன்று கட்டமாக வீடமைப்புக் கடன்கள் அதிகார சபையினால் வழங்கப்பட்டுள்ளது. 

 இவ் இவ்வீடுகளை மேலும் விரிவுபடுத்தி தமது சொந்த நிதியையும் செலவழித்து 7 இலட்சம் ருபாவுக்கும் மேலான நிதியில் தத்தமது விடுகளை மக்கள் நிர்மாணித்து்ள்ளமையிட்டு அதிகாரிக்ள் பாராட்டுக்களையும் அவா்களுக்கு தெரிவித்தனா்.

வீ டமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா் சஜித் பிரேமதாச மேலும் 2018 ஆம் ஆண்டிலும் இதே போன்ற்றதொரு ” உதா கம வீடமைப்புக் கிராமங்களை நிர்மாணிப்பதற்கு மேலும் அரசின் நிதி உதவி பெற்று வடக்ககின் விசேட வீடமைப்புத் திட்டத்திற்காக 3000 மில்லியம் ருபாவை ஒதுக்கியுள்ளாா். இந் நிதியில் 150 உதாக கம கிராமங்கள் நிர்மாணிக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட உள்ளது. என தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவா் சாகர பலன்சூரிய தெரிவித்தாாா்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -