மின்னொளி கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி: கல்குடா யங் ஸ்டார் மற்றும் காவத்தமுனை மில்லத் அணிகள் சம்பியன் கிண்ணம் வென்றன



எஸ்.எம்.எம். முர்ஷித்-
கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில், பிரதேச செயலாளர் ஏ. தாஹிர் அவர்களின் தலைமையில், ஓட்டமாவடி ரிவர் பார்க் மைதானத்தில் மின்னொளி கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி சிறப்பாக நடைபெற்றது. இச்சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டிகளில் கல்குடா யங் ஸ்டார் விளையாட்டுக்கழக அணி மற்றும் காவத்தமுனை மில்லத் விளையாட்டுக்கழக அணி சம்பியன் கிண்ணங்களைச் சுவீகரித்துக் கொண்டன.
2026.02.05 அன்று ஆரம்பமான இப்போட்டித்தொடரில், கோறளைப்பற்று மேற்கு – ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவில் பதிவு செய்யப்பட்ட 10 விளையாட்டுக்கழகங்களின் அணிகள் பங்கேற்றன. 40 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் 40 வயதுக்கு கீழ்ப்பட்டோர் என இரு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன.

போட்டித் திட்டத்தின் படி, முதல் நாள் – 02 குழுப்போட்டிகள், இரண்டாம் நாள் – 02 இடைவிலகல் போட்டிகள், மூன்றாம் நாள் – 02 காலிறுதி போட்டிகள்,
நான்காம் நாள் – 03 அரையிறுதி போட்டிகள், ஐந்தாம் நாள் (13.02.2026) – 02 இறுதிப்போட்டிகள் நடைபெற்றன. இறுதிப்போட்டிகளில், 40 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் கல்குடா யங் ஸ்டார் விளையாட்டுக்கழக அணி மற்றும் ஓட்டமாவடி வளர்பிறை விளையாட்டுக்கழக அணி மோதின. இதில் கல்குடா யங் ஸ்டார் அணி வெற்றி பெற்றது.

40 வயதுக்கு கீழ்ப்பட்டோர் பிரிவில் காவத்தமுனை மில்லத் விளையாட்டுக்கழக அணி மற்றும் கல்குடா யங் ஸ்டார் விளையாட்டுக்கழக அணி மோதியதில், காவத்தமுனை மில்லத் அணி வெற்றி பெற்றது.

வெற்றி பெற்ற அணிகளுக்கு வெற்றிக் கிண்ணம் மற்றும் ரூ.30,000 பணப்பரிசும், இரண்டாம் இடம் பெற்ற அணிகளுக்கு வெற்றிக் கிண்ணம் மற்றும் ரூ.20,000 பணப்பரிசும் வழங்கி வைக்கப்பட்டது.

பிரதேச செயலாளர் ஏ. தாஹிர் அவர்களின் தலைமையில், சிரேஷ்ட வீரர்களின் வழிகாட்டலில் நடைபெற்ற இப்போட்டித்தொடரின் இறுதிப்போட்டி மற்றும் பரிசளிப்பு நிகழ்வில், கோறளைப்பற்று மேற்கு – ஓட்டமாவடி பிரதேச சபைத் தவிசாளர் எம்.எம். ஹலால்தீன், வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.எஸ்.எம். ஜருள், உதவி பிரதேச செயலாளர் எம்.எச். பாறுக்,
பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ.எம். றியாஸ், கலாசார உத்தியோகத்தர் ஏ.எல். பீர் முஹம்மது, இளைஞர் தொழிற்பயிற்சி நிலைய பொறுப்பதிகாரி ஏ.எம். ஹனீபா, சமூக செயற்பாட்டாளர்கள் எச்.எம்.ஏ. அஸீஸ், எம்.ஏ.சீ. நியாஸ்தீன் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர்.

போட்டித்தொடர் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடைபெற உதவி, ஒத்தாசை வழங்கிய தவிசாளர், உதவி பிரதேச செயலாளர், பிரதித்திட்டமிடல் பணிப்பாளர், அலுவலக உத்தியோகத்தர்கள், விளையாட்டுக்கழக அணிகள், வீரர்கள், சிரேஷ்ட வீரர்கள், நடுவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பிரதேச செயலாளர் ஏ. தாஹிர் அவர்கள் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :