இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் மீலாதுந்நபி சிறப்பு நிகழ்ச்சி

எம்.எஸ்.எம்.ஸாகிர்-

நீர் கொழும்பு சென் ஜோசப் வீதி இல்லத்தில் அமைந்துள்ள மீலாதுந்நபி சகோதரத்துவ சங்கம் நடத்திய 5ஆவது வருட சிறப்பு மஜ்லிஸ் நிகழ்ச்சிகள் எதிர்வரும் 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் பிற்பகல் 2.00 மணிக்கு ஒலிபரப்பாகவுள்ளது.

இந்த மஜ்லிஸ் நிகழ்ச்சிகளை சகோதரத்துவ மீலாத் சங்கத்தின் சார்பில் அதன் ஸ்தாபகத் தலைவர் ஐ.பீ.எம். ஆர்ஸும் லாஹிர் முன்னின்று ஏற்பாடு செய்திருக்கிறார்.

அச்சங்கத்தின் நிர்வாகத் தலைவர் ஆரிப்டீன் சப்ரின் முன்னின்று நடத்தி வைத்தார்.

இம்முறை இந்த மஜ்லிஸ் நிகழ்ச்சிகளில் கொழும்பு பெரிய பள்ளிபள்ளிவாசல் கதீப் மௌலவி எம்.என். எம். இஜ்லான், சம்மாங்கொட்டை ஜும்ஆப் பள்ளிவாசல் கதீப் மௌலவி ஏ. அப்துல் ஸலாம், இலங்கை வானொலியின் முன்னாள் பணிப்பாளர் எம். இஸட். அஹ்மத் முன்னவர் ஆகியோர் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதோடு, நீர் கொழும்பு டவுன் ஜும்ஆப் பள்ளிவாசல் கதீப் மௌலவி சல்மான் பாரியும் நிகழ்வில் உரை நிகழ்த்தினார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -