மும்பை கோலாப்புர் மாவட்டம் சந்காட் தாலுகா கன்னுர் புத்ரூக் கிராமத்தில் உள்ள தனியார் பாடசாலை ஒன்றில் 8ஆம் வகுப்பு மாணவர்களை 300 தோப்புகரணம் போடவைத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் ஆசிரியை மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது அப்பாடசாலையின் அஸ்வினி என்ற ஆசிரியை 8ஆம் வகுப்பில் உள்ள 8 மாணவர்கள் படிப்பில் அக்கறை செலுத்தாததால் 300 தோப்புகரணம் போட வைத்து தண்டித்துள்ளதாக கூறப்படுகிறது.இதில் ஒரு மாணவிக்கு வலி ஏற்பட்டுள்ளதாகவும் அம்மாணவியின் தந்தை பொலிஸில் புகார் அளித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும் சம்பவம் குறித்து பொலிஸாரால் விசாரணைகள் மேற்கொண்டு வருவதாவும் தெரியவந்துள்ளது.இதனால் குறித்த ஆசிரியை மீது பாடசாலை நிர்வாகம் தற்காலிக பணிநீக்கம் விதித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளது.