ஹஸ்பர் ஏ ஹலீம்-
கிண்ணியா நகரசபைக்குடபட்ட சகல பிரதேசங்களிலும் டெங்கு பரவும் அபாயத்தைத் தடுக்கும் நோக்கில் கிண்ணியா நகரசபையின் செயலாளரும், விசேட ஆணையாளருமாகிய என். எம். நௌபீஸ் தலைமையில் நேற்று சனிக்கிழமை(16)கிண்ணியா பைசல் நகர் பகுதியில் டெங்கு ஒழிப்பு சிரமதானம் நடைபெற்றது.
இதில் டெங்கு குடம்பிகளை ஒழிக்கும் வேலைத்திட்டம் அபாயத்தை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர் இச் சிரமதானத்தின்போது கிராம அபிவிருத்திச்சங்கத்தின் அப்பகுதிக்கு பொறுப்பானவர்கள்,நகர சபை ஊழியர்கள், சிவில் பாதுகாப்பு அதிகாரிகள்,அப்பகுதி மக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டு வடிகான்களை சுத்தம் செய்யும் பணியிலும் சிரமதானத்திலும் ஈடுபட்டு பல பகுதிகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.