தொண்டமான் தலைமையில் காங்கிரஸ் வேட்பாளர்கள் வேட்பு மனுவில் கையொப்பமிட்டனர்


மு.இராமச்சந்திரன்-

ள்ளுராட்சி மன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் அதிகளவில் சேவல் சின்னத்தில் போட்டியிடும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் வேட்பாளர்கள் வேற்பு மனுவில் கையொப்பமிடும் நிகழ்வு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய ஆறுமுகம் தொண்டமான் தலைமையில் கொட்டகலை காங்கிரஸ் தொழில்நுற்ப கேட்போர் கூடத்தில் 17.12.2017 இடம்பெற்றது

,மஸ்கெலியா,நோர்வூட், கொட்டகலை,,அக்கரபத்தனை, போன்ற பிரதேச சபைகள், ஹட்டன் டிக்கோயா, தலவாக்கலை நகரசபைகள் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து சேவல் சின்னத்திலும்

அம்பகமுவ பிரதேச சபை மற்றும் நுவரெலியா மா நகரசபை தனித்து சேவல் சின்னத்திலும் போட்டியிடவுள்ளனர்

மேலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து வெற்றிலை சின்னத்தில் கொத்மலை,அங்குராகெத்த,வலப்பனை போன்ற பிரதேச சபைகளில் போட்டியிடவுள்ளது.

தலவாக்கலை லிந்துலை நரசபை மற்றும் நுவரெலிய மாநகரசபைக்கான வேற்பு மனுக்கள் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஏனைய சபைகளுக்கான
வேற்பு மனுவில் வேட்பாளர்கள் கையொப்பமிடும் நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் முத்துசிவலிங்கம் உட்பட இ.தொ.காவின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -