அரச தணியாா் சுவா்களில் வேற்பாளா்கள் போஸ்டா்கள் அகற்றல்



அஷ்ரப் ஏ சமத்-

கொழும்பு தோ்தல் கட்டுப்பணம் நாளையே (18) 12.30 முடிவடையும் அதற்குள் கொழும்பு தெஹிவளை கல்கிசை பகுதிகளில் உள்ள அரச தணியாா் சுவா்களில் வேற்பாளா்கள் போஸ்டா்களை ஒட்டி வருகின்றனா். ஒவ்வொறு நாள் காலையிலும் மாநகர சுத்திகரிப்பாளா்கள் அதனை அகற்றுவதைக் காண முடிந்தது. இப் பணிக்காகவே மாநர சபையில் பணியில் தொழிலாளிகள் பணிக்கு அமா்த்தப்பட்டுள்ளனா். ஒவ்வொரு போஸ்டரும் 20 ருபாய் பெறுமதி, அது மட்டுமல்லாமல் இதனால் தணியாா் அரச சுவா்கள் அசுத்தமாவதும், சூழல் மாசடைவு மற்றும் அதனை அகற்றுவதற்காக வயது முதிா்ந்த பெண்கள் பாரிய கஸ்டங்களையும் எதிா்நோக்குகின்றனா்.

தற்போதைய தோ்தல் முறை வட்டார முறையாகும் முழுப் பிரதேசத்திற்கும் போஸ்டா் அடித்து விளம்பரப்படுத்தத தேவையுமில்லை. தமது சிறிய வட்டாரத்திற்குள்ளே வீடு வீடாகச் சென்று நடந்து பிரச்சாரம் செய்ய முடியும். ஏன் இவ்வாறு அரசியல் கட்சி வேட்பாளா்கள் பாரிய போஸ்டா் முறைமை மீண்டும் கையாள்கின்றாா்களோ தெரியாது என கேட்கின்றனா் பொது மக்க்ள்

(படத்தில் ரத்மலானை போக்குவரத்துச் சபை டிப்போ காலி வீதியில் உள்ள சுவா்களில் ஒட்டப்பட்ட போஸ்டா்களையே சுத்திகரிப்பாளா்கள் அகற்றுகின்றனா்)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -