எயார்டெல் ரூ.49 ரீலோட்டுக்கு வழங்கும் புதிய திட்டம்...

ந்தியா நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனமான பாரதி ஏர்டெல் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது. ரூ.49 விலையில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. புதிய திட்டத்தின் வேலிட்டி 24 மணி நேரத்திற்கு பொருந்தும்.

ரூ.49 மட்டுமின்றி ஏர்டெல் நிறுவனம் ரூ.98 மற்றும் ரூ.146 விலையிலும் சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த திட்டங்களில் 1 ஜிபி டேட்டா 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. எனினும் குறைந்த காலக்கட்டத்திற்கு கூடுதல் டேட்டா தேவைப்படும் பட்சத்தில் ரூ.98 செலுத்தி 2 ஜிபி டேட்டா பெற முடியும். இதற்கான வேலிடிட்டி ஐந்து நாட்கள் ஆகும்.

புதிய சலுகை திட்டங்களை பெற வாடிக்கையாளர்கள் ஏர்டெல் இந்தியா அதிகாரப்பூர்வ வலைத்தளம் சென்று ஆன்லைனில் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். ஏர்டெல் வலைத்தளத்தில் வாடிக்கையாளர்கள் தங்களது மொபைல் நம்பரை பதிவு செய்து, ஏர்டெல் வழங்கும் சலுகை விவரங்களில் ஒன்றை தேர்வு செய்து ரீசார்ஜ் செய்யலாம்.




புதிய ஏர்டெல் சலுகை ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.52 திட்டத்திற்கு போட்டியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜியோ வழங்கும் திட்டத்தில் 1.05 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் 70 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை ஏழு நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

சமீபத்தில் ஏர்டெல் ரூ.349 மற்றும் ரூ.549 திட்டங்களை மாற்றியமைத்தது. அதன்படி இரண்டு திட்டங்களிலும் வாடிக்கையாளர்கள் முன்பை விட கூடுதல் டேட்டா பெற முடியும். முன்னதாக ரூ.349 திட்டத்தில் 1.5 ஜிபி டேட்டா வழங்கப்பட்ட நிலையில், 2 ஜிபி டேட்டா வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது. இதேபோல் ரூ.549 திட்டத்தில் 3 ஜிபி டேட்டாவிற்கு மாற்றாக தினமும் 3.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

இரண்டு திட்டங்களும் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோவின் இதே போன்ற சலுகைகள் முறையே ரூ.399 மற்றும் ரூ.499 விலையில் வழங்கப்படுகின்றன. இவற்றில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -