முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட தேசிய மீலாத் விழாப் போட்டியின் போது இரண்டாம், மூன்றாம் இடம் பெற்ற போட்டியாளர்களுக்கான பரிசளிப்பு விழாவொன்றினை கொழும்பு-12 பண்டாரநாயக்க மாவத்தையில் அமைந்துள்ள பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் 2017.12.28 ஆம் திகதி மு.ப.10.00 மணிக்கு கௌரவ தபால் தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் கலாசார அமைச்சர் அல் ஹாஜ் எம்.எச்.அப்துல் ஹலீம் அவர்களின் தலைமையில் நடாத்த திணைக்களம் சகல ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளதாக திணைக்களப் பணிப்பாளர் எம்.ஆர்.எம்.மலிக் தெரிவிக்கின்றார்.
இதன்போது தேசிய மீலாத் போட்டிகளில் பங்குபற்றி இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்றவர்கள் தங்களுக்குரிய பரிசினையும், சான்றிதழ்களையும் பெற்றுக் கொள்வதற்கு தவறாது சமுகம் தருவதோடு தாங்களுடன் சேர்த்து இன்னும் இருவர் மாத்திரம் சமூகமளிக்குமாரும், கலாசார போட்டி நிகழ்ச்சியில் இரண்டாம் மூன்றாம் இடம் பெற்ற குழுக்களின் தலைவர் மாத்திரம் மேடையில் தமது பரிசுகளைப் பெற்றுக் கொள்ள அழைக்கப்படுவர் என்பதையும் பணிப்பாளர் அறியத் தருகின்றார்.
குறித்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான அழைப்புக் கடிதங்கள் அவர்களுடைய பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனவே அக்கடிதங்களைப் பெற்றுக் கொண்டு குறித்த நிகழ்வுக்கு வருகை தருமாறும் பணிப்பாளர் கேட்டுக் கொள்கின்றார். அழைப்புக் கடிதங்களின் மாதிரிகள் திணைக்களத்தின் www.muslimaffairs.gov.lk எனும் இணையத்தளத்தில் பிரவேசிப்பதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
