தமிழ் முற்போக்கு கூட்டணி எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் எவ்வாறு களமிறங்கவுள்ளது என்பது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று (20-12-2017) இடம்பெற்றது.
இவ்வூடகவியலாளர் சந்திப்பின்போது தமிழ் முற்போக்கு கூட்டணி உள்ளுராட்சி தேர்தலின்போது நுவரெலியாவில் ஐக்கிய தேசிய முன்னணியில் யானை சின்னத்திலும், கொழும்பில் ஒருமித்த முற்போக்கு கூட்டணி ஏணி சின்னத்திலும் ஏனைய உள்ளுராட்சி சபைகளில் ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் தனித்தும் போட்டி இடுகின்றோம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர் பழனி திகாம்பரம் ஆகியோர் தெரிவித்தனர்.