தலவாக்கலை பி.கேதீஸ்-
நாடு தோறும் ஆயிரம் பாலம் அமைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் அக்கரபத்தனை மன்ராசி தோட்ட பகுதியில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் , இலங்கை தொழிலாளர் காங்ரசின் பொதுச் செயலாளர் ஆருமுகன் தொண்டமான் அவர்களின் ஆலோசனைக்கமைய மத்திய மாகாண சபையின் நிதி ஒதிக்கீட்டின் கீழ் அமைக்கப்பட்ட பிரதான பாலம் 14.11.2017 மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் மத்திய மாகாண விவசாய, இந்து கலாசார, தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் தமிழ் கல்வி அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் அவர்களுடன் மத்திய மாகாண சபை உறுப்பினர் சக்திவேல் ,மற்றும் பிலிப்குமார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜதுரை , பொதுமக்கள் என பலரும் கலந்துக் கொண்டதை இங்கு காணலாம்.

