அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் நிருவாக சபைக் கூட்டம் நேற்று முன்தினம் மாலை புதன்கிழமை(15.11.2017) பேரவையின் தேசிய தலைவர் தேசபந்து எம்.என்.எம்.நபீல் தலைமையில் கொழும்பு தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தின் போது புதிதிதாக உருவாக்கப்படவுள்ள உத்தேச அரசியல் யாப்பு திருத்தம் தொடரபில் முஸ்லிம் மக்களுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாத வகையில் அமைய வேண்டும் என இங்கு தீர்மானிக்கப்பட்டது.
இது விடயமாக அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.பேரவையின் கீழ் நாடு பூராகவும் இயங்கும் நுாற்றுக்கு மேற்பட்ட கிளைகளிலிருந்தும் ஆலோசனைகள் பெறப்பட்டு பேரவையினால் அமைக்கப்பட்ட சிரேஷ்ட நீதிபதிகள் மற்றும் ஆறு சட்டத்தரணிகள் கொண்ட குழுகள் இவ்விடயங்களை ஆராய்ந்து ஆலோசனை செய்து இதுபற்றி இறுதியாக தயாரிக்கப்பட்ட முழு ஆவணத்தினை பேரவை சமர்ப்பிக்கவுள்ளதாகும் இங்கு தீர்மானிக்கப்பட்டதாக பேரவையின் பொதுச் செயலாளர் சஹீட் எம்.றிஸ்மி இன்று தெரிவித்தார்.
