மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின் வழிகாட்டலின் மூலம் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் ஏற்பாட்டில் அகில இலங்கை ரீதியாக தனியார் பெருந்தோட்ட கம்பனிகளை பிரதிநிதித்துவப்படுத்திய அணிகளுக்கிடையிலான திகாம்பரம் சவால் கிண்ண கரப்பந்தாட்டப்போட்டியின் இறுதிசுற்று 19.11.2017 தினத்தன்று நோர்வுட் மைதானத்தில் இடம்பெற்றது.
இப்போட்டியில் பதுளையை சேர்ந்த தம்பேதென்ன தோட்ட அணியும் ஹட்டன் சாஞ்சிமலை தோட்ட அணியும் இறுதிசுற்றில் கலந்து கொண்டனர். இறுதியாக திகாம்பரம் சவால் கிண்ணத்தை பதுளை தம்பேதென்ன தோட்ட அணி வெற்றிக் கொண்டது. மேலும் மகளிருக்கான போட்டியில் காலி மாவட்டத்தை சேர்ந்த நாக்கியதெனிய தோட்ட அணி முதலிடத்தை பெற்றுக்கொண்டது. கலந்துக் கொண்ட அனைத்து வீர வீராங்கனைகளுக்கும் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.