ஆலையடிவேம்பில் மீள்குடியேற்ற அமைச்சினால் கட்டிமுடிக்கப்பட்ட வீடு பயனாளியிடம் கையளிப்பு




மைச்சர் டி.எம்.சுவாமிநாதனின் வழிகாட்டலில் கடந்தகால உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு-கிழக்கு மாகாண மக்களுக்காக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சினால் நடைமுறைபடுத்தப்பட்டுவரும் 65>000 வீட்டுத்திட்டத்தின் கீழ் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய வீடொன்றைக் கையளிக்கும் நிகழ்வு இன்று (23) காலை அக்கரைப்பற்று – 8/3 கிராம சேவகர் பிரிவில் இடம்பெற்றது.

குறித்த கிராம சேவகர் பிரிவுக்கான பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. கௌசல்யா சுதர்சனால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் வலது குறைந்த பயனாளி ஒருவரது தேவையின் பொருட்டு விசேட குளியலறையுடன் கூடிய சுமார் 0.9 மில்லியன் ரூபாய்கள் செலவில் நிர்மாணிக்கப்பட்டிருந்த பிரஸ்தாப வீட்டை ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீஸன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு நாடாவை வெட்டி உரிய பயனாளியிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்தார்.

இவ்வைபவத்தில் பிரதேச செயலாளருடன் ஆலையடிவேம்பு உதவி பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் என்.கிருபாகரன், கிராம உத்தியோகத்தர் ரி.லிஷாந்தினி மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.லோகநாதன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -