வைத்தியசாலைகளின் தாதியர்கள் பணிபகிஷ்கரிப்பு




க.கிஷாந்தன்-

தாதியர்கள் உள்ளிட்ட மருத்துவ சேவையாளர்களின் ஒன்றிணைந்த சங்கத்தினர் தொழிற்சங்க நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளமையினால் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள சில வைத்தியசாலைகளின் தாதியர்கள் 22.11.2017 அன்று காலை முதல் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தாதியர் சேவையில் நிலவும் சம்பள பிரச்சினைகள், மேலதிக கொடுப்பனவுகள் வழங்கப்படாமை உள்ளிட்ட பல விடயங்களை முன்வைத்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் மலையகத்தில் உள்ள சில வைத்தியசாலைகளில் 22.11.2017 அன்று காலை வெளிநோயாளர் பிரிவு முற்றாக இயங்கவில்லை. இங்கு சிகிச்சைக்காக வருகை தந்த பொதுமக்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் வீடு திரும்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தாதியர்களின் சம்பள பிரச்சினை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சந்தரப்பம் பெற்றுக் கொடுக்கப்பட்டால் எவ்வேளையிலும் பணிப்பகிஷ்கரிப்பை கைவிட தயார் என குறித்த சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -