காரைதீவு நிருபர் சகா-
கல்முனையின் சமகால விவகாரம் தொடர்பில் கல்முனைவாழ் தமிழ்மக்கள் மூன்று முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளனர்.
இத்தீர்மானம் அம்பாறை மாவட்ட தமிழர் மகா சங்கம் நேற்று(20) கல்முனையில் கூட்டிய மக்கள் பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
கல்முனை 1 கிராம அபிவிருத்திச்சங்கக் கட்டடத்தில் அம்பாறை மாவட்ட தமிழர் மகாசங்கத்தின் முன்னாள்தலைவரும் முன்னாள் நாவிதன்வெளிப்பிரதேச தவிசாளருமான கே.சின்னத்துரை தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நீலாவணை பாண்டிருப்பு கல்முனை நற்பிட்டிமுனை சேனைக்குடியிருப்பு உள்ளிட்ட தமிழ்ப்பிரதேசங்களின் மக்கள் கலந்துகொண்டனர்.
கல்முனையை நான்காகப்பிரிக்கும் சமகால அரசியல் களநிலவரம் தொடர்பாக ரெலோ கட்சியின் உபதலைவரும் கல்முனை மாகரசபை முன்னாள் எதிர்க்கட்சித்தலைவருமான ஹென்றிமகேந்திரனைக் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவர் இதுபவரை நடந்த பேச்சுவார்த்தை மற்றும் தீர்மானங்கள் தொடர்பாக சபையில் எடுத்துரைத்தார்.
முடிவில் சபையில் சமுகமளித்திருந்த அனைத்து தமிழ்மக்களும் ஒன்றிணைந்து 3 முக்கிய தீர்மானங்களை ஏகோபித்தமுறையில் நிறைவேற்றினார்கள்.
அவையாவன:
1.சாய்ந்தமருதுக்கான தனியான பிரதேசபை பிரிக்கப்படுவதனை நாம் வரவேற்கிறோம். அது தவிர்ந்த ஏனைய கல்முனைப்பிரதேசங்கள் யாவும் ஒன்றாகவே ஒரு மாகரசபையாகவே இருத்தல்.
2. அது சாத்தியமாகாவிடில் கல்முனை மாகரசபையை இரண்டாகப் பிரிப்பது. அதாவது கல்முனைத்தரவைப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து பெரியநீலாவணை ஈறாகவுள்ள பிரதேசத்தை கல்முனை வடக்கு நகரசபையாகவும் சாய்ந்தமருது கல்முனைக்குடி அடங்கலான பிரதேசத்தை கல்முனை தெற்கு மாகநரசபையாகவும் பிரிப்பது.
3. அதுவும் சாத்தியமாகாவிடின் கல்முனை பசார் உள்ளிட்ட கல்முனை தமிழ்க்கிராமங்கள் யாவும் ஒரு நகரசபையாகப் பிரித்தல்.
இந்த முக்கிய 3 தீர்மானங்களை இன்று(22) புதன்கிழமை மாலை கொழும்பில் நடைபெறும் தமிழ் முஸ்லிம் தலைவர்களது இரண்டாம் கட்டப்பேச்சுவார்த்தையில் வலியுறுத்தவேண்டும் என அதில் பங்கேற்கவிருக்கும் ரெலோ உபதலைவர் ஹென்றிமகேந்திரனை சபையினர் கேட்டுக்கொண்டனர்.
அதனை அவர் ஏற்றுக்கொண்டார்.
அம்பாறை மாவட்ட தமிழர் மகாசங்கத்தலைவர் கே.சந்திரலிங்கம் செயலாளர் து.இராமகிருஸ்ணன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டார்கள்.
மேலும் இனிவரும் காலங்களில் கல்முனைத் தமிழ்மக்கள் தொடர்பான எந்தவொரு தீர்மானமும் அம்பாறைமாவட்ட தமிழர் மகாசங்கம் கூட்டும் பொதுக்கூட்டத்தில்தான் எடுக்கப்படவேண்டும் எனவும் சபையினர் வேண்டுகோள்விடுத்தனர்.
அதற்கு மகாசங்கத்தினரும் ஒத்துக்கொண்டனர்.