காரைதீவு சகா-
விசேட தேவையுள்ள மாணவர்களுக்கான அகிலஇலங்கை ரீதியில் நடைபெற்ற விளையாட்டுப்போட்டியில் சம்மாந்துறை அல் அர்சத் மகா வித்தியாலய மாணவன் எம்.ஜ.எம்.முஜீப் இரு பதக்கங்களைப்பெற்றுச் சாதனைபடைத்துள்ளார்.
இப்போட்டி ஹோமாகம மஹிந்தராஜபக்ச விளையாட்டு மைதானத்தில் நேற்றுமுன்தினம் சிறப்பாக நடைபெற்றது.
அகிலஇலங்கைரீதியிலான இப்போட்டியில் சம்மாந்துறை மாணவன் முஜிப் உயரம் பாய்தல் போட்டியில் இரண்டாமிடத்தைப்பெற்று வெள்ளிப்பதக்கத்தையும் 15ஆயிரம் ருபாவையும் பரீதி வட்டம் வீசுதல் போட்டியில் மூன்றாமிடத்தைப் பெற்று வெண்கலப்பதக்கத்தையும் 10ஆயிரம் ருபாவையும் சுவீகரித்துக்கொண்டார்.
சம்மாந்துறை அல்அர்சத் மகாவித்தியாலயத்தில் ஏஎஸ்என் அனுசரணையுடன் இயங்கிவரும் விசேடதேவையுள்ள வகுப்புகளின் பிரிவுப்பொறுப்பாசிரியர் எம்.ஜ.எம்.றியாத் இதற்கான பயிற்சியினையும் ஊக்குவிப்பினையும் வழங்கியிருந்தார்.
இது தொடர்பாக வித்தியாலய அதிபர் எ.எல்.மஜீத் தலைமையில் சம்பிரதாயபூர்வமாக பாராட்டுநிகழ்வு நேற்று பாடசாலையில் நடைபெற்றது.
வைபவத்தில் சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்hளர் எம்.எஸ்.சஹதுல்நஜீம் ஏஎஸ்என்என் அமைப்பின் செயலாளர் எம்.ஆர்.எம்.ஹமீம் சாதனை மாணவன் முஜீப்பின் பெற்றோர் பாடசாலை முகாமைத்துவக்குழு பொறுப்பாசிரியர் றியாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மாணவனைப்பாராட்டி பேசிய பணிப்பாளர் நஜீம் பரிசும் வழங்கினார்.




