சர்வதேச விருது பெற்ற இளம்கண்டுபிடிப்பாளர் வினோஜ்குமாருக்கு சம்மாந்துறையில் பெருவரவேற்பு!






காரைதீவு நிருபர் சகா-

ண்டுபிடிப்புகளுக்காக தேசிய ரீதியில் 31விருதுகளையும் சர்வதேச விருதொன்றையும் பெற்றெடுத்த வடக்கு கிழக்கின் இளம் கண்டுபிடிப்பாளர் சோமசுந்தரம் வினோஜ்குமாருக்கு நேற்று(3) வெள்ளி மாலை அவர் பிறந்த சம்மாந்துறை கோரக்கர்கிராமத்தில் ஆலய நிருவாகத்தினரால் பெருவரவேற்பளிக்கப்பட்டது.

முன்னதாக சம்மாந்துறை பொலிஸ்நிலயச்சந்தியிலிருந்து பாண்ட் வாத்தியம் கலாசார அணிகள் சகிதம் கோரக்கர் தமிழ் மகாவித்தியாயலம் வரை வினோஜ்குமாரும் அதிதிகளான கிழக்குமாகாணசபையின் முன்னாள் மாகாணசபைஉறுப்பினர் மு.இராஜேஸ்வரன் நம்பிக்கைஒளி கிழக்கு இணைப்பாளர் கி.ஜெயசிறில் உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் அழைத்துவரப்பட்டு அங்கு பாராட்டுவிழா இடம்பெற்றது.

அங்கு உரையாற்றிய கிழக்குமாகாணசபையின் முன்னாள் மாகாணசபைஉறுப்பினர் மு.இராஜேஸ்வரன் : வினோஜ்குமார் எமது இனத்திற்கு கிடைத்த ஒரு சொத்து. அவர் இவ்வாறு சர்வதேச விருது பெற்றுள்ளார் என்று கேள்விப்பபட்டதும் அவரை நேரில் சென்று வாழ்த்தவேண்டும் என ஆவல்கொண்டு அவரது வீட்டிற்கு வந்து பாராட்டினேன்.

எதிர்காலத்தில் இவரொரு சிறந்த விஞ்ஞானியாக வருவார் என்பதில் சந்தேகமில்லை. என்றார்.
நம்பிக்கைஒளி கிழக்கு இணைப்பாளர் கி.ஜெயசிறில் பேசுகையில் இவர் தமிழினத்தில் அதுவும் இந்துவாக இருந்து பல தடைகளையும் பல புறக்கணிப்புகளையும் தாண்டி இவ்வாறானதொரு சாதனையை படைத்திருப்பது சாதாரணமானதல்ல. இதனைப் பாராட்டவேண்டியது அனைவரினதும் கடமையாகும். என்றார்.

உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா பேசுகையில்: இத்தகைய பாராட்டுவிழாவை ஒழுங்குசெய்த ஆலயநிரவாகத்தினரை முதலில் பாராட்டுகின்றேன். இளம் கண்டுபிடிப்பாளர் வினொஜ்குமாரை சிறுவயதுமுதல் நானறிவேன். அவரது ஒவ்வொரு நகர்வுகளையும் அருகிலிருந்து அவதானிக்கிறேன். இவர் எதிர்காலத்தில் நாசாவில் பணியாற்றுவார். அதற்கு இறைவன் அருள்புரியவேண்டும் என்றார்.

வினோஜ்குமாருக்கு பொன்னாடைபோர்த்தி நினைவுச்சின்னம் வழங்கினார்கள். பாராட்டுமடலொன்றை ஆலயநிருவாகத்தினர் வழங்கினர்.வினோஜ்குமாரின் பெற்றொரும் சமுமளித்திருந்தனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -