வெள்ளம்காரணமாக 134 குடும்பங்களை சேர்ந்த 525 பேர் பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டனர்




மு.இராமச்சந்திரன்-

வெள்ளம் பெருக்கெடுத்துள்ளமையினால் நோர்வூட் பொகவந்தலா பிரதேசத்தை சேர்ந்த 134 குடும்பங்களை சேர்ந்த 525 பேர் பாடசாலைகளிலும் ஆலயங்களிலும் தஞ்சம் புகுந்துள்ளனர்

நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வரும் அடை மழையினால் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதுடடன் குடியிருப்புகளிலும் நீர் புகுந்துள்ளது

காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் கெசல்கமுவ ஓயா பெருக்கெடுத்துள்ளமையினால் நோர்வூட் நகர கரையோர குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்துள்ளமையினால் 74 குடும்பங்களை சேர்ந்த 333 பேர் இடம்பெயர்ந்து நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்திலும் நோர்வூட் சிங்களம் வித்தியாலயத்திலும் தங்கவைக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்த இதே வேலை
பொகவந்தலா. கெம்பியன் கெக்கர்சோல்ட் பகுதிகளிலும் குடியிருப்புகள் சேதமுற்றும் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளமையினால் 60 குடும்பங்களை சேர்ந்த. 242 பேர் இடம்பெயர்ந்துள்ளனர் இவர்கள் சிறுவர் நிலையங்களிலும் ஆலயங்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலா பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் அடை மழையினால் காசல்ரீ நீர்தேக்கத்தின் நீர்மட்டம் 8 அடி உயர்ந்துள்ளதாகவும் மேல்கொத்தமலை நீர்தேக்கத்தின் 4 வான்கதவுகளும் திறந்து விவடப்பட்டுள்ளதாக மின்சாரசபை அதிகாரிகள் தெரிவித்தனர் உடமைகளை இழந்து நிகத்திக்குள்ளான நிலையிலுள்ள பாதிக்கப்படரர்களுக்கு உலருணவு பெருட்களை வழங்க. பொலிஸாரும் அம்பகமுவ பிரதேச செயலைகமும் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -