கிண்ணியா பாலத்திற்கருகில் 90 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டவருக்கு விளக்கமறியல்

அப்துல்சலாம் யாசீம்-

கிண்ணியா பாலத்திற்கருகில் 90 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை டிசம்பர் மாதம் 14ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று (30) திருகோணமலை நீதிமன்ற பிரதான நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா உத்தரவிட்டார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பெரிய கிண்ணியாவைச் ​சேர்ந்த அப்துல்காதர் அமானுல்லாஹ் (37வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தார்.

கிண்ணியா பாலத்திற்கருகில் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வருவதாக வழங்கப்பட்ட இரகசிய தகவலையடுத்து கிண்ணியா பொலிஸ் பொறுப்பதிகாரி எச்.எம்.பீ.பீ.விஜயசிறி தலைமையில் பொலிஸார் சோதனையிட்ட போது 90 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்றைய தினம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்ட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -