அதாவுல்லாவை சீண்டும் ஆசாமிகளுக்கு!!

ஷிபான் BM-


ஸ்ஸலாமு அலைக்கும்.

இன்றைய கிழக்குமாகாண அரசியல் சூழ்நிலையில் அதாவுல்லாஹ்வின் வளர்ச்சி பெரும் அதிர்வலையைத் தோற்றுவித்துள்ளது. அதனை ஜீரணிக்க முடியாத சில சக்திகள் தாம் நடுனிலையானவர்கள் என சமூகத்துக்குக் காட்டிக்கொள்ள தற்போது அதாவுல்லாவை கடிந்துகொள்ள தலைப்பட்டுள்ளதானது நகைப்பாக இருக்கிறது.

அரசியல் சாக்கடைதான். அதிலும் குறிப்பாக நமது முஸ்லிம் அரசியல் சாக்கடைக்குள்ளும் சல்லெடுக்க முடியாத அளவு தொய்ந்து போயுள்ள நிலையில், ஏதோ ஒரு வகையில் இருக்கின்ற மூன்று தலைமைத்துவங்களுக்குள்ளும் இன்றைய நாட்களில் உண்மையாக நமது முஸ்லிம் சமூகத்துக்காக பேசிவருகின்ற தலைமைத்துவம் அதாவுல்லா மாத்திரமே! இதனை யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

அதிக்காரக் கதிரையை அலங்கரித்திருக்கும் இரு கட்சிசார்ந்த தலைவர்களும் இன்று சமூகத்தை அடமானம் வைத்துப்பிழைத்துவரும் சூழ்னிலையில் மகுடம் துறந்து தேர்தல் தோல்வியிலே துவண்டுபோயுள்ள அதாவுல்லாவை சீண்டுவதற்கான மறைமுகமான காரணமாக தொக்கு நிற்பது சில விஷமிகளின் தூண்டுதலே அன்றி வேறொன்றாகவும் இருக்கமுடியாது.

முஸ்லிம் அரசியியலில் பாரிய மாற்றங்களை செய்ய வேண்டும் என்று யாரும் கனவுகாணலாம், மறுப்பதற்கில்லை. ஆனால் ஏதோவொரு கட்டமைப்புக்குள் கொண்டுவரப்பட்டிருக்கின்ற நமது சமூகக்கட்டமைப்பை முற்றாக சிதைத்து உடனே புதிதாக கட்ட நினைப்பதானது பகல்கனவாகவே போகும். மேலும் அதற்கான எத்தனங்களை அதாவுல்லாவில் பிரயோகித்து , அவரின் சதையைப்புசித்து தொடரவேண்டிய அவசியம் இல்லை.

அதிலும் குறிப்பாக எந்தவொரு சந்தர்பத்திலும் கிழக்கு மக்களையோ நமது முஸ்லிம் சமூகத்தையோ பணத்துக்காக அடமானம் வைத்து சிதைத்து காட்டிக்கொடுத்த தவறினை அதாவுல்லா செய்யவில்லை. மேலும் மற்றைய தலைவர்கள் இருவர் மீதும் இருக்கும் மாசுக்களில் துளியளவேனும் அவரில் இல்லை என்பதுமே நிதர்சனம். இந்தக்கோணங்களில்தான் இன்று நாம் எமது சமூக அரசியலை அணுகவேண்டுமே தவிர வேறுவகைகளில் அல்ல என்பதனைப் புரிந்து கொள்ளுங்கள்.

தலைமைத்துவங்கள் மூன்றிலும் உண்மையான தலைமைத்துவம் அதாவுல்லா என்பது காலம் காட்டித்தரும் உண்மையாகும். அதாவுல்லாவின் தீர்க்கதரிசனமான முடிவுகளும் செயற்பாடுகளும், கொண்ட கொள்கையில் மாற்றம் இல்லாத செயற்பாடுகளும் இன்று பலரின் மத்தியிலும் வரவேற்பினை பெற்றுவருகின்ற சூழ்நிலையில் சின்னத்தனமான அறிக்கைகள் ஊடாக அவற்றினை சிதைக்கமுனைவது நமது சமூகத்தின் விடிவினைத் தடுப்பதற்கான முயற்சியே அன்றி வேறொன்றாகவும் தெரியவில்லை.

ஆகவேதான், நட்போடும் பரிவோடும் பாசத்தோடும் கேட்கின்றேன். நமது நிலைப்பாடுகளில் சில மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டு தொடர்வோம். இருக்கின்றவற்றுக்குள் இருந்து நல்லவற்றை தெரிந்து தீயவற்றை புறந்தள்ளுவோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -