வானில் இருந்து வீழ்ந்த மஞ்சள் மற்றும் பச்சை நிறமான மர்மப்பொருள் -மாத்தறையில் சம்பவம்

விண்கல் ஒன்றின் பாகம் என கருதப்படும் மர்ம பொருள் ஒன்று மாத்தறை பிரதேசத்தில் நேற்று இரவு வீழ்ந்துள்ளதாக ஆதர் சி கிளார்க் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

புவியின் வளிமண்டலத்தில் எதிர்பாராத விதமாக நுழைந்த விண்கல்லின் பகுதியே அங்கு வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த எரிகல்லை பொது மக்கள் தொட முயற்சிக்க வேண்டாம் எனவும் அது பற்றி தகவல் தெரிவிக்க 0714800800 என்ற தொலைபேசி இலக்கத்தை அழைக்குமாறும் அந்த மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

ஆதர் சி கிளார்க் மத்திய நிலையம் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் விண்வெளி ஆய்வு விரிவுரையாளர் சந்தன ஜயரட்ன இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.

பச்சை மற்றும் மஞ்சள் நிறத்தில் ஒரு மர்மப் பொருள் வானில் இருந்து வீழ்வதை பொதுமக்கள் அவதானித்துள்ளனர்.

விண்ணில் இருந்து ஏதேனும் ஒரு பொருள் வீழும் போது வெளிச்சம் மற்றும் சத்தம் ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.(அதெ)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -