பொதுபல சேனா இந்த அரசாங்கத்தின் பங்காளிகள் என்பதை முஸ்லிம்கள் புரிந்துகொள்ள ஆரம்பித்துள்ளனர்.




ஊடகம்-
பொதுபல சேனா அரசாங்கத்தின் ஒரு பங்காளி என்பதைமுஸ்லிம்கள் புரிந்துகொள்ள ஆரம்பித்துள்ளதாக பாராளுமன்றஉறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மொழி பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியில்அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்.

முஸ்லிம்களின் கையிலிருந்த வியாபார முயற்சிகள் இன்றுபறியோயுள்ளன.பொருளாதார ரீதியாக வீழ்ச்சி.அடுத்த பக்கம்பொதுபல சேனா போன்ற இனவாத அமைப்புகள் மேற்கின்நிதியுதவியுடன் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்டுவருகின்றனர்.பொதுபல சேனாவும், ஞானசார தேரரும் மைத்திரி,ரணில், ராஜித்தவின் அரசியல் நாடகத்தின் பகுதியொன்று என்பதைமுஸ்லிம்கள் புரிந்துகொள்ள ஆரம்பித்துள்ளனர்.நீதிமன்றஉத்தரவை ஞானசார தேரர் பலமுறையும் மீறினார்.

ஆனால் இந்த அரசாங்கம் கைதுசெய்யவில்லை. ஆனால், நாமலைகைதுசெய்தனர்.யானையொன்றை வைத்திருந்ததாகதேரரொருவை கைதுசெய்தனர்.எனினும் ஞானசார தேரரைகைதுசெய்யவில்லை. இந்த அரசாங்கம் பொதுபலசேனாவைபாதுகாக்கின்றது என்பதற்கு இதனைத் தவிர வேறு உதாரணங்கள்தேவைப்படாது.

இந்த அரசாங்கம் பொதுபல சேனாவின் பின்னால் இருப்பதுதெளிவு. ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகையில் சமயத்தலைவர்களுக்கான கூட்டத்தில் ஞானசார தேரரையும்இணைத்துக்கொண்டிருந்தனர்.அவர் எவ்வாறு அங்குசெல்வார்.அவர் பௌத்த தலைவரொருவர் அல்ல.மல்வத்தை,அஸ்கிரிய, அமரபுர போன்ற மகாநாயக்க தேரர்களே பௌத்ததலைவர்கள். இந்த அரசு அவரை சமய தலைவராகமதிக்கின்றது.முஸ்லிம்களை மஹிந்த ராஜபக்ஷவிடம் இருந்துதூரமாக்க உருவாக்கப்பட்டவது.

பொதுபல சேனாவை தாபித்தது நாம் அல்ல. அதனைஉருவாக்கியது மேற்கு நாடுகள்.மேற்கின் தலையீடே இன்றுவரைஉள்ளது.மேற்கு நாடுகளே நிதியுதவியும் மேற்கொண்டன. அதன்பின்னால் மங்கள சமரவீர, மலிக் சமரவிக்ரம, ரணில் விக்ரமசிங்க,மைத்திரிபால சிரிசேன, அசாத் சாலி போன்றோரும் உள்ளனர்.காலியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கோத்தாபய ராஜபக்ஷகலந்துகொண்டதை வைத்து நாம் ஞானசார தேரரைஉருவாக்கியதாக கூறுகின்றனர். அந்நிகழ்வுக்கு அழைப்புவிடுத்ததே ராஜித சேனாரத்ன என்பதை மறந்துவிடாதீர்கள்.

ஞானசார தேரர் மீதான வழக்குகளை அரசாங்கம் நீக்கிக்கொள்ளப்போகின்றதா? என அவரிடம் கேட்கப்பட்ட போது,

கட்டாயம் இல்லாது செய்துகொள்வார்கள். ஞானசார தேரரைஉருவாக்கியவர்களின் அரசாங்கமே பதவியில் உள்ளது. ஞானசாரதேரர், மக்கள் விடுதலை முன்னணி,தமிழ் தேசிய கூட்டமைப்புபோன்றோரும் அரசாங்கத்தின் பங்காளிகள். நாம் மாத்திரமேஎதிர்க்கட்சியினர்.கட்டாயம் நீக்கிக்கொள்வார்கள்.

அரசாங்கத்துக்கு தேவையானது சிங்கள,முஸ்லிம், தமிழ் மக்களைகூறுபோட்டு நாட்டை மீண்டுமொரு யுத்தத்திற்குகொண்டுசெல்வதற்கேயாகும். மக்கள் அதற்குஇடம்கொடுக்கக்கூடாது என குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் முஸ்லிம்களின்உரிமைகளுக்காக குரல் கொடுக்கின்றனரா? ஏன் கேட்கப்பட்டகேள்விக்கு பதில் அளித்துள்ள அவர்.

அசாத் சாலி போன்றோர் பணத்திற்காக வாய் திறப்பவர்கள்.அவர்கள் முஸ்லிம்களுக்காக போராடுபவர்கள் அல்ல. அவர்கள்இவ்வளவு நாள் போராடியும் முஸ்லிம்களின் பிரச்சினைகள்தீர்ந்தபாடில்லை. முஸ்லிம்களின் வியாபாரம், இளைஞர்களின்கல்வி, ஆசிரியர் பற்றாக்குறை, வேலையற்றோர் பிரச்சினைகள்குறித்து முஸ்லிம் தலைவர்கள் கதைப்பதில்லை. முஸ்லிம்தலைவர்களுக்கு அரசியல் என்பது ஒரு வியாபாரம். அவர்களைஅதையே மேற்கொள்கின்றனர்.

புதிய தேர்தல் முறை மாற்றத்தால் முஸ்லிம்களுக்கு அநியாயம்நிகழ்ந்துள்ளது. முஸ்லிம்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றுதெரிந்துகொண்டு ஆதரித்து வாக்களித்தனர். கிழக்கில் இதுவரைகாலமும் இருந்த முஸ்லிம் தலைமைத்துவத்தைஇல்லாதொழிக்கவே முஸ்லிம் தலைவர்கள் வாக்களித்தனர்.முஸ்லிம் முதலமைச்சர் ஒருவர் எமக்கு வேண்டாமென்றுவாக்களித்துள்ளனர்.

றிஷாத் பதியுதீன், றவூப் ஹக்கீம் ஆகியோரும்அரசாங்கத்துக்காகவே அன்றி, முஸ்லிம்களுக்காகமுன்னிற்பவர்கள் அல்ல. அவர்களின் அமைச்சுப் பதவிகளைபாதுகாத்துக்கொள்ள, எந்த அரசாங்கம் பதவிக்கு வந்தாலும்ஆதரிக்கின்றனர்.

மார்ச், ஏப்ரல் மாதங்களில் முஸ்லிம் கடைகளை தீ வைக்கவும்,பள்ளிவாசல்களை தாக்கவும் ஆரம்பித்தனர்.அதற்கு நீதியானவிசாரனைகளை நடத்த ஆணைக்குழுவொன்றுஅமைக்கப்படவில்லை.தர்கா நகர் விடயத்துக்குஆணைக்குழுவொன்று அமைக்கப்படவில்லை. அவ்வாறுஅமைக்கப்படின் கைதுசெய்யப்படவேண்டியவர்கள் ராஜித்தவும்,சம்பிக்கவும், மங்களவுமே என குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -