மருதமுனையைச் சேர்ந்த சட்டத்தரணி இப்றாலெப்பை முகம்மது றமீஸ் உத்தியோகப் பற்றற்ற நீதிபதியாக சத்தியப்பிரமாணம்





PMMA . காதர்-
ருதமுனை மக்காமடி வீதியைச் சேர்ந்த சட்டத்தரணி இப்றாலெப்பை முகம்மது றமீஸ் கல்முனை நீதிமன்ற நீதி நிருவாக வலய உத்தியோகப் பற்றற்ற நீதிபதியாக நீதி அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி கௌரவ நவரட்ன மாறசிங்க முன்னிலையில் திங்கள் கிழமை(16-10-2017)சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.இந்த நிகழ்வில் சட்டத்தரணிகளான சாரிக்காரியப்பர், ஆரிக்கா காரியப்பர், எம்.எம்.எம்.முபீன், ஆகியோருடன் சட்டப்பயிலுனர் சுகைல் பிர்தௌஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இப்றாலெப்பை முகம்மது றமீஸ் தரம் ஒன்று தொடக்கம் தரம் ஆறு வரையான ஆரம்பக் கல்வியை பாண்டிருப்பு அல்-மினன் வித்தியாலயத்தில் கற்று பின்னர் உயர்தரம் வரை மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியில் கற்று 1996ஆம் ஆண்டு கொழும்பு பல்கலைக் கழகத்தின் சட்டபீடத்திற்குத் தெரிவாகி 2001ஆம் ஆண்டு தனது சட்டமானிப்பட்டத்தைப் பெற்றார்.

பின்னர் இலங்கை சட்டக் கல்லூரியல் சட்டத்தரணி பரீட்சையில் சித்தியடைந்து 2002ஆம் ஆண்டு இலங்கை மீயுயர் நீதிமன்ற சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.பல அமைப்புக்களில் அங்கம் வகித்து சமூக சேவையில் ஆர்வம் காட்டிவரும் இவர் மருதமுனையைச் சேர்ந்த ஆதம்பாவா இப்றாலெப்பை,நெய்னா முகம்மது சாபுறா உம்மா தம்பதியின் புதல்வராவார்.







எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -