மாற்றுக் கட்சியினரால் தேசியப் பட்டியல் விடயத்தில் இழிவு படுத்தப்படுத்தப்படும் அட்டாளைச்சேனை ?



மூத்த போராளி-

டந்த பாராளுமன்ற தேர்தலின் போது அட்டாளைச்சேனைக்கு தேசியப் பட்டியல் தருவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரால் வாக்குறுதி அளிக்கப்பட்டமை யாவரும் அறிந்த விடயமாகும்.

குறிப்பாக கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திருகோணமலை மற்றும் வன்னி மாவட்டங்களில் மு.கா இற்கு பாராளுமன்ற பிரதிநிதிகள் இல்லாமல் போனமையானது கட்சிக்கும், தலைமைக்கும் பாரிய நெருக்கடியை கொடுத்ததுடன், பெரும் தலையிடியாகவும் மாறியது.

அதே நேரம் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக பதவி வகித்த மன்சூர் பாராளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றதன் காரணமாக குறித்த மாகாண சுகாதார அமைச்சுப் பதவியானது வெற்றிடமாகியது.

இந்த நிலையில் அட்டாளைச்சேனை தேசியப் பட்டியல் தொடர்பாக மு.கா தலைவர் அளித்த வாக்குறுதியை சற்று தாமதித்து நிறைவேற்றும் பொருட்டு, தலைமையானது மாகாண சபை உறுப்பினர் நசீருக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு பதவியை வழங்கி கெளரவித்தது.

ஆயினும் கிடைக்கப் பெற்ற மாகாண அமைச்சுப் பதவி மூலம் அட்டாளைச்சேனை மக்களின் தேசியப் பட்டியல் கனவை சற்று ஆசுவாசப்படுத்த முடிந்ததே தவிர மு.கா இனால் முழுமையாக திருப்திப்படுத்த முடியாமல் போனது.

மு.கா இற்கு கிடைக்கப்பெற்ற இரண்டு தேசியப் பட்டியல்களும் கட்சியின் தலைவரால் தற்காலிகமாக சல்மான் மற்றும் டாக்டர் ஹபிசுக்கும் நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கப்பட்டிருந்தது.

சில மாதங்களின் பின்னர் டாக்டர் ஹபிசின் தேசியப் பட்டியலானது மு.கா தலைவரினால் திருகோணமலை மாவட்டத்தின் தெளபிக்கிற்கு சுழற்சி அடிப்படையில் வழங்கி வைக்கப்பட்டு மாவட்டத்தில் நிலவிய அரசியல் வெற்றிடம் நிரப்பப்பட்டது.

தற்போது கிழக்கு மாகாண சபையானது 2017.09.30 உடன் தனது 05 வருட ஆயுட் காலத்தை நிறைவு செய்து விட்டது. இதனைத் தொடர்ந்து மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம கிழக்கு மாகாண சபையின் சகல அமைச்சுக்களையும் தனது நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்.

மேலும் மாகாண சபைத் தேர்தலும் தொகுதி பிரிப்பு நடவடிக்கைகளுக்காக அரசினால் காலவரையின்றி பிற்போடப் பட்டுள்ளது. ஏற்கனவே உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தலும் வட்டார முறை பிரிப்பு காரணமாக இடம்பெறாமல் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறு இருப்பினும் அடுத்த வருட ஆரம்பத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் இடம்பெறும் என நம்பகமாக தெரிய வந்துள்ள நிலையில் அட்டாளைச்சேனைக்கான தேசியப் பட்டியல் விவகாரம் சூடு பிடித்துள்ளது.

அம்பாறை மாவட்டத்தை பொறுத்தளவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் இதயம் என வர்ணிக்கப்படும் ஒரு மாவட்டமாகும். தற்போது நிந்தவூர் கழியோடை பாலத்திற்கு அப்பால் அரசியல் அதிகாரமில்லாமல் உள்ளது.

குறிப்பாக அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, பொத்துவில் பிரதேச சபைகள் மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபை அமைந்துள்ள பிரதேசங்களில் எவ்விதமான அரசியல் அதிகாரங்களும் இல்லாமல் கானப்படுகின்றமை துரதிர்ஷ்டவசமான நிலையாகும்.

இதனை உடனடியாக நிவர்த்திக்க வேண்டுமாயின் அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கு மு.கா தேசியத் தலைவர் வாக்குறுதி அளித்த பிரகாரம் தேசியப் பட்டியலை வழங்குவதன் மூலம் நிவர்த்திக்க முடியும்.

அட்டாளைச்சேனையை பொறுத்தளவில் தேசியப் பட்டியலைப் பெறுவதற்காக இருவர் முயற்சிப்பதைக் கானலாம். ஒருவர் கபூர் லோயர் மற்றவர் பழீல் BA ஆகும். இவ்விருவரையும் பொறுத்த மட்டில் மக்கள் செல்வாக்கில் வீழ்ச்சி உற்றவர்களாக கானப்படுவதுடன், தேர்தல் காலங்களில் கூட போராளிகளுடன் சரியான முறையில் உறவைப்பேன தெரியாதவர்களாக உள்ளனர்.

ஆயினும் இவ்விருவரையும் விட முன்னாள் அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர், முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சருமான நசீர் அட்டாளைச்சேனை மக்களிடம் மட்டுமல்ல முழு அம்பாறை மாவட்ட மக்களது அபிமானத்தை பெற்றவராக திகழ்வதுடன், மக்கள் செல்வாக்கும் மிகுந்தவராகவும் காணப்படுகின்றார்.

அத்துடன் கடந்த 2015 பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் போட்டியிடாத நான்காவது வேற்பாளராக களத்தில் போராளியோடு போராளியாக நின்று மு.கா இன் மூன்று வேற்பாளர்களின் வெற்றிக்கு அரும்பாடு பட்டவர்.

கடந்த சில வருடங்களாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸால் அட்டாளைச்சேனைக்கு விரைவில் தேசியப் பட்டியல் வழங்கப்படவுள்ளதாக கதைகள் உலாவிவரும் நிலையில், இவ்விடயம் தொடர்பாக மாற்றுக் கட்சியினர் தொடர்ச்சியாக மேடைகளிலும், சமூக வலைத்தளங்களிலும் அட்டாளைச்சேனை மக்களையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸையும் கேவலமான முறையில் இழிவுபடுத்தி வருகின்றனர்

எனவே தேசியப் பட்டியல் பிரதிநிதியாக ஒருவரை அட்டாளைச்சேனையில் தெரிவு செய்வவதன் மூலம் இக்களங்கத்தை துடைத்தெரிய முடியுமென்பதுடன், அத்தேசியப் பட்டியலுக்கு முன்னாள் மாகாண சுகாதார அமைச்சரே மிகப் பொருத்தமானவர் என்றால் மிகையில்லை.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் நெருங்கியுள்ள இவ்வேளையில் அம்பாறை மாவட்டத்தில் சிறப்பான முறையில் தேர்தலுக்கு முகங்கொடுக்க அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கு தேசியப் பட்டியலை வழங்குவதும் பொருத்தமாக இருக்கும்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -