உன்னை நானும் என்னை நீயும் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும்
ஆழுக்கால் நினைத்துக் கொண்டமை யாருக்கு புரியும்
அந்த ஆண்டவனை தவிர
உனது மொழி நூலில் எனது பெயர் எழுதப்பட்டிருந்தது.
உனது மூச்சிலும் பேச்சிலும் நான் அவ்வப்போது உச்சரிக்கப்பட்டேன்.
உன் அரசியல் வானில் ஜொலித்த நட்சத்திரங்களுக்குள் முதன்மையானவன் நான்
நீ வாழ்ந்திருந்த காலம் எல்லாம் நமது கட்சியில் கால் ஊன்றி
கரைபடியாத கரங்களுடன் உனது முன்னூசியில் நூலாகத்தான் ஒட்டியிருந்த்தேன்
இவைகளை இன்றையவர்கள் நன்கு அறிந்தும் தெரிந்தும் கூட
சிலர் ஏனோதானோ என்று அறியாதது போல் பாசாங்கு பன்னுவது இன்னும்
எனக்கு வேதனையாகத்தான் இருக்கின்றது என் நெஞ்சும் வலிக்கின்றது.
உன் அரசியல் அம்பில் சில வேளைகளில் நான் எய்யப்பட்டிருந்தாலும்
இன்றுவரை நொந்து கொள்ளாத நட்பின் மானஸ்தகரான கவரி
'மான்'தான் கபூர் அதனால்தான் இன்னும் என்னை சுதாகரித்துக் கொண்டிருக்கிறேன்.
சுழன்றடித்த காலச்சூறாவழியில் நானும் உன்னை இன்று இழந்து தவிக்கின்றேன்.
அந்நாள் 16.09.2000 இந்நாள் முதல் கடந்த 17 ஆண்டுகள் தோறும்
நான் அவ்வப்போது என் முகத்தை கண்ணீரால் கழுவிக்கொள்கிறேன்.
அந்தோ பாவம் பலர் ஒலிவாங்கியை இறுகப்பிடித்து
உரத்த குரலில் கூலிக்கு கூச்சலிடுகின்றவர்களைப் பார்த்து பரிதாபப்படுகிறேன்.
அவர்கள்தான் எல்லாம் என்று மார்பு தட்டிக்கூறுகின்றார்கள்.
ஆனால் அந்த அடிமரம் மட்டும்தான் சாய்ந்துவிட்டது.
அம்மரத்தின் ஆணிவேரோ மண்ணுக்குள் மறைந்திருப்பதனால்
இந்த பக்க வேர்களுக்கும், கிளைகளுக்கும் மற்றவர்களுக்கும்
இன்னும் என்னையும் தெரிவதில்லை எது எப்படியாயினும்
இன்றுவரை வாய்மூடி மௌனமாக உன் பாசறையில் மனம் மாறாமல்
நம் மரத்தில்தான் தொடர்ந்தும் நான் பயணித்து வருகின்றேன்...