தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இடம்பெற்ற விசேட போக்குவரத்து பஸ் சேவையில் இலங்கை போக்குவரத்து சபையின் அட்டன் டிப்போவிற்கு 1 கோடி 43 லட்சம் ருபா வருமானம் கிடைத்துள்ளது
கடந்த 15 மே திகதி முதல் கொழும்பு மற்றும் புரநகர் பகுதிகளுக்கு விசேட இரவு பகல் பஸ் சேவை நடத்தப்பட்டதாகவும் இதனூடாகவே மேற்குறிப்பிட்ட வருமனத்தை மெற்றுகொள்ள. முடிந்தது என அட்டன் டிப்போ அதிகாரி ரோகன த சில்வா தெரிவித்தார்
கொழும்பு மற்றும் புரநகர் பகுதிகளில் வேலை செய்யும் மலையக பகுதியை சேர்ந்தவர்கள் பண்டிகையின் நிமித்தம் விடுமுறையில் அதிகளவில் வருகைத்தந்ததுடன் மீண்டும் தமது கடமைகளுக்கு திரும்புவோரின் நலன் கருதி தொடர்ந்து போக்குவரத்து விசேட சேவை இடம்பெறுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.