பி.கேதீஸ்-
கோரிக்கையானது நுவரெலியா மாவட்டத்தில் வாழும் தமிழ் மக்களுக்கானது மட்டுமல்ல. அது நுவரெலியா மாவட்டத்தில் வாழும் தமிழ்,சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவரதும் தேவையும் கோரிக்கையுமாகும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவத்துள்ளார்.
நுவரெலியா மாவட்ட பிரதேச சபைகள் அதிகரிப்பு விடயம் தொடர்பாக பாராளுமன்ற குழு அறையில் இடம்பெற்ற கலந்துரையாடல் சம்பந்தமாக அவரிடம் வினவியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடரபில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.
நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச சபைகளையும் பிரதேச செயலகங்களையும் அதிகரிப்பது தொடர்பான கோரிக்கை மாவட்ட மக்களாலும் அரசியல் பிரதிநிதிகளாலும் அதிகாரிகளினாலும் கூட பல வருடகாலமாக முன்வைக்கப்பட்டு வந்துள்ளது. தற்போது பிரதேச சபைகளை அதிகரிக்கும் செயற்பாடுகள் கோரிக்கையாக மடடுமின்றி செயல்வடிவிலும் முன்னெடுக்கும் காலகட்டம் நெருங்கியுள்ளது.
இந்த செயல்வடிவம் நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் முன்னெடுப்புகளால் ஆனது என்பதனை யாரும் மறந்துவிட முடியாது. இந்த கோரிக்கையை பாராளுமன்றிலும் அமைச்சரவையிலும் தொடர்ச்சியாக பேசப்பட்டு பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் அரசியல் நிபந்தனைகள் அடிப்படையிலேயே தற்போது தீர்வினை நோக்கிய நகர்வாக அமைந்துள்ளது.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பதாக நடைபெற்ற ஆளும் அரசாங்க கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இடம்பெற்ற வாதப்பிரதிவாதங்கள் பேச்சுவார்த்தைகளே இன்றைய கட்டத்திற்கு இந்த விடயத்தை முன்னகர்த்தியுள்ளது என்பதை யாரும் மறந்து விட முடியாது. அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட எமது கூட்டணி தலைவர்கள் மனோ கணேசன், பழனி திகாம்பரம் ஆகியோரின் சாணக்கியமான செயற்பாடுகளே இன்றைய முக்கிய கட்டத்திற்கு காரணமாகும்.
பாராளுமன்றில் செவ்வாயன்று நடைபெற்ற கூட்டம் கடந்த மாதம் 14ஆம் திகதி நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தின் தொடர்ச்சியாகும். கடந்த மாதம் நுவரெலியா மாவட்ட மக்கள் பிரதிநிதிகளுடன் தொழிநுட்ப ரீதியான குழு பேச்சுவார்த்தையை நடாத்தியிருந்தது. அதன்போது பேசப்பட்ட விடயங்களின் முன்னேற்ற அறிக்கை சமர்ப்பிப்பு அறிக்கையாகவே பாராளுமன்ற குழு அறையில் இடம்பெற்ற கூட்டம் அமைந்திருந்தது. இதன்படி நுவரெலியா, அம்பகமுவை ஆகிய இரண்டு பிரதேச சபைகளையும் தலா மூன்று வீதம் அதிகரித்து ஆறாக உயர்த்துவதற்கு நாம் முன்வைத்த முன்மொழிவுகள் அதிகமான புள்ளிகளைப்பெற்றுள்ள நிலையில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதேநேரம் வலப்பனை, கொத்மலை, ஹங்குராங்கத்தை பிரதேச சபைகளின் அதிகரிப்புகளுக்கான முன்மொழிவுகளும் பரீசீலிக்கப்பட வேண்டியுள்ளது. தொழில்நுட்ப குழு அதிகாரிகள் இன்னும் அதனை நிறைவு செய்யவில்லை. ஹங்குராங்கத்தை பிரசே சபையை இரண்டாகப் பிரிப்பது தொடர்பில் நியமங்களின் அடிப்படையில் சில புள்ளிகள் குறைவாக அமைவதற்கான வாய்ப்பு உண்டு. ஏனெனில் எனைய பிரதேச சபைகளை விட அங்கு சனத்தொகை அளவு குறைவாகும்.
எனினும் அதனையும் இரண்டாக வகுப்பதே உகந்தது என நாம் வலியுறுத்தியுள்ளோம். அங்கு தமிழ் சனத்தொகையின் அளவ குறைவு என்றபோதும் கூட இரு மொழி பிரதேச செயலகமாக அங்கீகரிக்கப்பட்ட பிரதேச செயலாகமாகும். பொது நியமத்தில் இருந்து குறைந்த நிலையில் அந்த அங்கீகாரம் எற்றுக்கொள்ளப்பட்டது போல் பிரதேச சபை விடயத்தில் பொது நியமத்தைவிட குறைந்தாலும் அங்கு பிரதேச சபை இரண்டு உருவாக்கப்படலாம். எமது கோரிக்கை அதிகாரிகளின் அடுத்த கட்ட அறிக்கையோடு எதிர்வரும் வார முற்பகுதியில் நிறைவு செய்யப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியாகும் என நம்புகின்றோம்.
பிரதேச சபைகள் சட்டத்தில் 33வது சரத்து திருத்தம் என்பது உண்மையில் பெரும்பாலும் பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் தமிழ் மக்களை மாத்திரம் பாதிக்க கூடியதே. ஆனால், பிரதேச சபைகளின் அதிகரிப்பு என்பது ஒட்டுமொத்த நுவரெலியா மாவட்ட மக்களுக்கும் உள்ள பிரச்சினையாகும். அம்பகமுவ, நுவரெலியா பிரதேச சபைகளை நாங்கள் உதாரணம் காட்டுவது அங்கு இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்ட சனத்தொகை வாழ்வதனாலாகும்.

இங்கு தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். அதேநேரம் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் ஏனைய வலப்பனை கொத்மலை ஹங்குராங்கத்தை பிரதேச சபைகளும் கூட பரப்பளவிலும் சனத்தொகையிலும் அதிகமான அளவினைக்கொண்டதாகும். வலப்பனை, கொத்மலை பிரதேச செயலக பிரிவில் ஒரு லட்சத்துக்கு மேல் சனத்தொகை வாழ்கின்றனர். ஹங்குராங்கத்தை எண்பதினாயிரம் ஆகும். இது தேசிய சராசரி ஐம்பதினாயிரத்தை விட அதிகமானதாகும்.
நுவரெலியா மாவட்ட தமிழ் பிரதிநிதிகள் இந்த பிரச்சினையை உரக்க பேசுகிறோம் என்பதற்காக இது மலையகத் தமிழ் மக்களுக்கான பிரச்சினை மாத்திரமல்ல. எமது மாவட்டத்தில் வாழும் சகோதர சிங்கள , முஸ்லிம் மக்களுக்குமான பிரச்சினை என்பதை தெளிவுபடுத்த வேண்டியுள்ளது. எனவேதான் நுவரெலியா மாவட்ட பிரதேச சபைகளின் எண்ணிக்கை 12 ஆக உயர்த்தப்படல் வேண்டும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம். இதனை நுவரெலியா கச்சேரியில் இடம்பெற்ற கூட்டத்தின்போதும் பாராளுமன்ற குழு அறையில் நடைபெற்ற கூட்டத்திலும் நான் ஆணித்தரமாக வலியுறுத்தினேன் என்றும் தெரிவித்தார்.