அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பும் கோத்தபாய ராஜபக்ஷ இன்று கைது செய்யப்படலாம்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ இன்று கைது செய்யப்பட உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவிலிருந்து இன்று நாடு திரும்பும் அவர் கைது செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த அரசாங்க காலத்தில் மெதமுலன பிரதேசத்தில் டீ.ஏ. ராஜபக்‌ஷ அருங்காட்சியகம் மற்றும் நினைவகம் அமைக்கப்பட்ட போது அரச நிதி தவறாக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட உள்ளார்.

இந்த திட்டத்தின் போது, இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான சுமார் 90 மில்லியன் ரூபா நிதி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர், கோட்டாபய ராஜபக்‌ஷ உள்ளிட்ட சம்பந்தப்பட சில தரப்பினரிடம் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(அததெரண)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -