மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட தடகள விளையாட்டுப் போட்டி -2017

முஹம்மட் ஜெலீல், நிந்தவூர்-
மூக சேவைகள் திணைக்களம் மற்றும் அம்பாரை மாவட்ட செயலகத்தினூடாக ஒழுங்கமைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட தடகள விளையாட்டுப் போட்டி சென்ற மாதம் 09-09-2017. அம்பாரை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இப்போட்டிகளில் கலந்துகொண்ட எமது நிந்தவூர் மண்ணைச் சேர்த்த மாற்றுத்திறனாளிகளான M. அப்துல் றஹீம் அவர்கள் ஈட்டி எறிதலில் முதலாமிடத்தையும் மற்றும் பரிதிவட்டம் வீசும் போட்டியில் M.R. முஹம்மட் றிஷாத் அவர்கள் முதலாமிடத்தை பெற்று நிந்தவூர் மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளனர். போட்டியில் வெற்றிபெற்ற இருவருக்கும் 23-09-2017,இன்று நிந்தவூர் பிரதேச செயலாளர் ஹாஜியானி ஆர்.யு. அப்துல் ஜலீல் அவர்கள் வெற்றிக்கான சான்றுதல்களை வழங்கிவைத்தார்.

மேலும் எதிர்வரும் 2017-11-17ம் திகதி அகில இலங்கை ரீதியாக நடைபெறவுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டியில் நிந்தவூர் பிரதேச செயலகத்தின் சார்பாக இவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -