அப்துல்சலாம் யாசீம்-
கிழக்கு பல்கலை கழகத்தின் திருகோணமலை வளாகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டாவது சர்வதேச ஆராய்ச்சி மாநாடு இன்று (13) திருகோணமலை கோனேஷபுரியில் அமைந்துள்ள வளாகத்தில் வளாக முதல்வர் டொக்டர் வீ.கனகசிங்கம் தலைமையில் நடைபெற்றது.
இம்மாநாட்டில் 66 ஆய்வு கட்டுரைகள் மற்றும் துரைசார் ஆய்வாளர்களால் முன்வைக்கப்டவுள்ளதுடன் வேலையில்லா பட்டதாரிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான காரணங்கள்- சமகால சமூக கலாச்சார பிரச்சினைகள் உட்பட பல விடயங்கள் கலந்துறையாடப்படவுள்ளது.
இன்றைய தினம் ஆரம்பமான இம்மாநாடு நாளை நிறைவு பெற இருப்பதுடன் உள்நாட்டு வௌிநாட்டு ஆய்வாளர்களும் இதில் பங்கு பற்றுகின்றமை விஷேட அம்சமாகும்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகமவும் விஷேட அதிதியாக பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா -கிழக்கு பல்கலைக்கழக பிரதி துணைவேந்தர் டொக்டர் கருணாகரன் உட்பட உயரதிகாரிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.