அரசியல் ஞானியே
உன் வருகையினால்
வரண்டு கிடந்த
எங்கள் வாழ்க்கை
வசந்தமாகியது
துயரத்தைச் சுமந்த
தோள்கள் சுதந்திரமாகியது.
மரமாக வந்து
நிழல் தந்து
மலராக வந்து
மணம் தந்து
கனியாக வந்து
சுவை தந்து
உரையால் எமக்கு
உரம் தந்தாய்.
வீரத்தளபதியே
நீ வீழ்ந்தாலும்
விரூட்ஷமாய் எங்களுக்கு
நீயிருக்கின்றாய்
உனக்கு
விழுதுகளாய் நாமிருக்கின்றோம்
நீ வீழ்ந்து விடாமல்
பாதுகாக்க..
வாளலெடுத்துப் போர் செய்த
வள்ளல் நபி
வழி வந்தவர்கள் நாங்கள்
வீரமிருக்கு எம்மிடம்
விரைந்து செயற்படுவோம்
யாருக்கும் அஞ்சாமல்
ஊருக்காக உழைப்போம்.
உன் உயிர் பிரிந்தாலும்
எங்களில் நீ வாழ்கின்றாய்
உனக்காக நாங்கள்
பிரார்த்திற்கின்றோம்
உன் மறுமை வாழ்வு
சிறப்பதற்காக..
பி.எம்.எம்.ஏ.காதர்-
மறைந்த பெருந்தலைவர்
மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின்
மறைவின் 17 ஆண்டு நிறைவையொட்டி
(16-09-2017)எழுதிய கவிதை இது.