மாந்தை உப்புக்கூட்டுத்தாபனத்தின் சுற்றுலாவிடுதி திறப்பு விழா..!

கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான மாந்தை உப்புக்கூட்டுத்தாபனத்தின் சுற்றுலாவிடுதித் திறப்பு விழா, எதிர்வரும் சனிக்கிழமை 27.08.2017 அன்று காலை 9.30மணிக்கு மன்னாரில் இடம்பெறவுள்ளது. மாந்தை உப்புக்கூட்டுத்தாபனத்தின் தலைவர் எம்.எம். அமீன் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் பிரதமவிருந்தினராக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கலந்துகொள்ளவுள்ளார். 

விஷேட விருந்தினராக பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், பாராளுமன்ற உறுப்பினர்களான, சால்ஸ் நிர்மலநாதன், காதர் மஸ்தான், சிவசக்தி ஆனந்தன், மாகாண அமைச்சர் டெனீஸ்வரன், மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன், உப்புக்கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் சிஹாப்தீன் ஆகியோரும் பங்கேற்கின்றனர். 

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கைத்தொழில் வாத்தக அமைச்சின் செயலாளர் சிந்தக்க லொக்குஹட்டி, மன்னார் அரசாங்க அதிபர் தேசபிரிய, மன்னார் மேலதிக அரச அதிபர் ஸ்டேன்லி டீமெல் ஆகியோர் உட்பட மன்னார் மாவட்ட பிரதேச செயலாளர்கள் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -