பொத்துவில் புலிபிடித்தசேனை முஸ்லிம்களின் காணியை அபகரிக்கும் வனபரிபாலனஇலாகா!





காரைதீவு நிருபர் சகா-

பொத்துவில் மதுரம்வெளியிலுள்ள புலிபிடித்தசேனை எனும் பிரதேசத்தில்
முஸ்லிம்களுக்குச் சொந்தமான 650ஏக்கர் குடியிருப்புக்காணியை வனபரிபாலன
இலாகாவினர் ஆக்கிரமித்துவருவதாகக்கூறி எதிர்ப்புத் தெரிவித்து நேற்று
(16)செவ்வாய்க்கிழமை அங்கு மக்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஊர்வலத்திலும்
ஈடுபட்டனர்.

அன்று பகல் 11மணியளவில் தொடங்கிய ஆர்பப்hட்ட ஊர்வலம் பிற்பகல் 1.30மணிவரை
இடம்பெற்றது. குளத்தடிஇருந்து பொத்துவில் பிரதானவீதிவரை சுமார் 1கிலோமீற்றர்
தூரம் இவ்வார்ப்பாட்டம் ஊர்வம் இடம்பெற்றது.


ஆர்ப்பாட்டத்திலீடுபட்டோர் பல சுலோகங்களைத்தாங்கிய பதாதைகளுடன் காணப்பட்டனர்.
'நல்லாட்சி அரசே ஏழைமக்களின் நிலங்களை சுரண்டாதே! ஏழைகளுக்கு நீதிவேண்டும்!
ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே! மக்களின் உரிமைகளைப் பறிக்காதே! மக்களின்
நிலங்களை ஏன் பயிர்செய்யவிடாமல் தடுக்கிறீர்கள்? அரச அதிகாரிகளின் பசிக்கு
அகதிகளா உணவு?' போன்ற சுலோகங்கள் அதில் காணப்பட்டன.

பொத்துவில் அறுகம்மைபக்களப்பிற்கு அப்பாலுள்ள மதுரம்வெளி அல்லது
புலிபிடித்தசேனை என அழைக்கப்படும் பிரதேசத்திலே இவ் எதிhப்ப ஆர்ப்பாட்டம்
இடம்பெற்றது. ஆர்ப்பாட்டத்தை புலிபிடித்தசேனை கமக்காரர் அமைப்பு ஏற்பாடு
செய்திருந்தது.


இவ்வமைப்பில் கடந்த 15வருடங்களாக செயலாளராக இருந்துவரும் 47வயதுடைய
ஜே.என்.சுல்தான் இதுபற்றிக்கூறுகையில்:

1956 முதல் இப்பிரதேசத்தில் நாம் வாழ்ந்து வந்தோம். அங்கு 650 ஏக்கரில் 250
குடும்பங்கள் பூர்வீகமாக வாழ்ந்துவந்தோம்.1990 வன்செயலின்போது நாம்
இடம்பெயரவேண்டிநேரிட்டது. அதனால் எமது பிரதேசம் பற்றைக்காடாக மாறியது.

1994களில் சிலர் அப்பிரதேசத்தில் பல வசதியீனங்களுக்கு மத்தியில்
மீளக்குடியேறினர். ஏனையோர் தொடர்ந்து பொத்துவிலில் உற்றார்உறவினர் வீடுகளில்
தஞ்சமடைந்திருந்தனர்.

2004இல் சுனாமி தாக்கியபின்னர் அங்கு சுனாமிவீதியொன்று அமைக்கப்பட்டது.
அதன்போது எம்மனைவருக்கும் பொத்துவில் பிரதேசசெயலாளரால் பர்மிட் வழங்கப்பட்டன.
சிலர் மேட்டுநிலப்பயிர்ச்செய்கையிலீடுபட்டனர்.
இந்நிலையில் 2007 இல் வனபரிபாலன இலாகாவினர் எமது பகுதிக்க வந்து பெர்மிட்
காணிகளில் கட்டைபோட்டு ஆக்கிரமிக்கத்தலைப்பட்டனர்.

நாம் 2015.09.18ஆம் திகதியன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் அம்பாறை அரச அதிபர்
பிரதேசசெயலாளர் பாராளுமன்ற உறுப்பிர்களான மன்சூர் பைசால்காசிம் ஹரீஸ் உள்ளிட்ட
பலருக்கும் எமது நிலை பற்றி எழுத்துமூலம் முறைப்பாடுசெய்தோம். இதுவரை யாருமே
எமக்குப் பதில் அனுப்பவில்லை.

நாம் பொத்துவில் நீதிமன்றில் வழக்குத்தாகக்ல் செய்தோம். 07வருடங்களாக
வழக்குப்பேசப்பட்டது. 2015இல் இக்காணி மக்களுக்குரிய காணி என
தீர்ப்பளிக்கப்பட்டது.
அதன்பிறகு சுமார் 50பேர் அங்கு சென்று தற்காலிகமாக குடியேறினர். இந்நிலையில்
நேற்றுமுன்தினம் இரவோடிரவாக வனபரிபாலன இலாகாவினர் வந்து
கட்டைகளைப்போடத்தொடங்கினர்.


நாம் பிரதேசசெயலாளரிடம் சென்று முறையிட்டோம். எதுவித பலனுமில்லை.

அதனால் இவ்வார்ப்பாட்டத்தை முன்னெடுக்கின்றோம். நாம் ஏழைகள் .இன்றைய
நல்லாட்சியில் எமக்கு நீதிகிடைக்கவேண்டும்.என்றார்.

பகல் 11மணியளவில் தொடங்கிய இவ்வாப்பர்hட்டம் பிற்பகல் 1.30மணியளவில்
நிறைவுபெற்றது. மக்கள் கலையும் நேரம் அங்கு வந்த பிரதேச செயலாளார் விரைவில்
வனபரிபாலன இலாகாவினரையும் மக்களையும் அழைத்து பேசி ஒரு முடிவுக்கு வரலாம்
என்று கூறிச்சென்றுள்ளார்.

தீர்வு வராவிடின் நாம் தொடர்ந்து போராடத்தயங்கோம் என மேலும் செயலாளர்
சுல்தான் சொன்னார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -