தமிழ்மக்களுக்காக இன்று குரல்கொடுக்கும் பௌத்ததேரரை வரவேற்கின்றோம்-வீர.கிருஸ்ணமூர்த்தி

காரைதீவு நிருபர் சகா-

ந்த நாட்டில் தமிழ்மக்களை ஓரங்கட்டிய ஒரு இனத்திலிருந்து ஒரு சமயத்தலைவர்
அதுவும் ஒரு பௌத்ததேரர் தமிழ்மக்களுக்காக குரல்கொடுக்க முன்வந்தமை
வரவேற்புக்குரியது. அதேவேளை தமிழ்மக்களுக்காக குரல்கொடுக்கவேண்டியது ஒரு
பௌத்ததேரர்தான் என்ற துர்ப்பாக்கியநிலை வந்துள்ளது என்பதை நினைக்கும்போது
வேதனையாகவுள்ளது.

இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் காரைதீவுப்பிரதேச இணைப்பாளரும்
பிருதெசசபையின் உபதவிசாளருமான பொறியியலாளர் வீரகத்தி கிருஸ்ணமூர்த்தி மட்டு.
மங்களராமய விகாராதிபதி வண.அம்பிட்டிய சுமணதேரரின் செயற்பாடு தொடர்பாக அறிக்கை
வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் கருத்துரைக்கையில்:
மட்டு.மாவட்டத்தில் துறைநீலாவணை முதல் வெருகல் வரை தமிழர் காணிகள் இரவோடிரவாக
அபகரிக்கப்பட்டுவருவதாகவும் இனப்பிரச்சினைத்தீர்வு வரும்போது வடக்கு கிழக்கில்
தமிழ்மக்களுக்கு காணிகள் இருக்குமா என்ற சந்தேகம் நிலவுவதாக
தமிழ்த்தேசியத்தின் பிரமுகா வியாழேந்திரன் துணிந்து கருத்துக்களை
தெரிவித்துள்ளார்..அது பாராட்டுக்குரியது.வரவேற்பக்குரியது.
ஏனயோர் இன்றும் மௌனமாயுள்ளனர்.
அபிவிருத்தி அரசியலுக்கு அப்பால் உரிமைஅரசியல் என்று வரிந்துகட்டிக்கொண்டு
தமிழ்மக்களது வாக்குகளை அமோகமாகப்பெற்ற த.தே.கூட்டமைப்பின் அரசியல் தலைவர்கள்
அந்த மக்களுக்காக குரல் எழுப்பினரா? என்ற கேள்வி எழுகின்றது. இல்லாவிட்டால்
இந்த பௌத்ததேரர் களத்தில் இறங்கவேண்டிவந்திருக்காது. இக்காணி விவகாரம்
உரிமைப்பிரச்சினை இல்லையா? வாக்குகளைப்பெற்ற தமிழ்த்தலைமைகள் எங்கே? இது
மக்களின் ஆதங்கம்.
தமிழ்த்தலைவர்கள் குரல்கொடுக்காமையினால்தான் நான் இறங்கியிருக்கின்றேன் என
அந்த தேரரே கூறியிருக்கிறார்.

அம்பிட்டிய தேரர் தாம் சார்ந்த சமுதாயத்திற்கு குரல்கொடுத்திருந்த அதேவேளை
தாம் வாழும்பிரதேசத்தில் அடக்கிஒடுக்கப்படும் இன்னொரு சிறுபான்மை இனத்திற்காக
குரல்கொடுத்திருப்பதை வரவேற்கத்தான்வேண்டும்.

கண்முன்னே நடக்கும் காணி சுவீகரிப்பு காணி அபகரிப்பைத்
தட்டிக்கேட்கமுடியாவிடில் இன்னுமின்னும் ஏன அரசோடு ஒட்டிக்கொண்டிருப்பது?
கிழக்குமாகாணஅரசை அமைக்க ஒத்தழைப்பை வழங்கியது ஏன் ? என்ற வினா எழுகின்றது.

மண்ணும் மக்களும் இல்லாமல்போன பிற்பாடு யாருக்காக தீர்வு? இதனை
தமிழ்த்தேசியத்தலைவர்கள் என்று சொல்லப்படுவோர் சிந்திக்கவேண்டும்.
அதிகாரப்போட்டி பதவிப்போட்டி கட்சிமேலாதிக்கப்போட்டி போன்றவற்றில்
காலத்தைக்கடத்துவதும் மேடைப்பேச்சுக்களில் காலத்தைக்கடத்துவதுமே இவர்களது
வேலையாகிவிட்டது.

அளித்த வாக்குறுதிகள் பற்றி மக்கள் கேள்விகள் கேட்டால் மழுப்பல் பதில்களை
கூறிக்கொண்டு ஆள்மாறுகின்றார்கள். இனியும் இவர்களை நம் தமிழ்மக்கள் தயாரில்லை.
என்றார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -