கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் இது தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுனரிடத்தில் விடுத்த வேண்டுகோளையடுத்து கிழக்கு மாகாண ஆளுனர் ரோகித போகொல்லாகம சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்
கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் ஆசிரியர்கள் புனித ஹஸ்கடமை மற்றும் உம்றா கடமைகளுக்காக மக்கா செல்வதற்கு விடுமுறை பெறுவதில் பலதரப்பட்ட சிக்கல்களையும் அசௌகரியங்களையும் எதிர் நோக்கி வருகின்றனர்.
இதனால் தமது மார்க்க கடமையை செய்வதற்கு முஸ்லிம் ஆசிரியர்கள் பின் வாங்க வேண்டிய நிலைமை ஏற்படுகின்றது. இதனை கருத்திற் கொண்டு இந்தப்பிரச்சினை தீர்க்கப்படல் வேண்டும் என கிழக்கு மாகாண ஆளுனரிடத்தில் சுட்டிக்காட்டி 2.7.2017 புதன்கிழமையன்று கிழக்கு மாகாண ஆளுனரின் கவனத்திற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் கொண்டு வந்தார்.
இதனையடுத்து இது தொடர்பில் கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் ஆசிரியர்கள் புனித ஹஜ் கடமைக்காக மக்கா செல்வதற்கான விடுமுறை பெறுவதை இலகுபடுத்தி அவர்களின் விடுமுறையை இலகுவாக அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண ஆளுனர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்தார்.