காத்தான்குடி....

Mohamed Nizous-

பாரு மகனே பாரு - இந்தப்
ஊரின் அருமை பாரு
பேரும் புகழும் சேர இருக்கும்
ஊரின் அருமை பாரு
ஊரின் அருமை பா...ரு.

கிழக்கே ஆழி மேற்கே ஆறு
இடையில் இந்த ஊரு
அழைக்கும் பாங்கு ஒலிக்கும் பள்ளி
அறுபதினைத் தாண்டும்
உள்ளவரெல்லாம் முஸ்லீம்கள்-வேறு
இல்லை இங்கு இன்னொருவர்
நூறு வீதம் முஸ்லிம் வாழும்
DS பிரிவு ஊரு
இல்லை எங்கும் பாரு

ஈச்சை மரங்கள் காய்ச்ச குலைகள்
இருக்கும் அழகைக் கூட்டும்
பீச்சில் சேர்ந்து பேசும் கதையில்
மூச்சில் கலக்கும் மகிழ்ச்சி
பாதைகள் தோறும் பாடசாலை-மதப்
போதனை செய்ய மத்ரஸாக்கள்
பட்டங்கள் பெற்றோர்
பல்லாயிரம் வாழும்
ஊரு இந்த ஊரு
ஒருமைல் பரப்பு ஊரு

முகத்தை மூடி கற்கச் செல்லும்
முஸ்லிம் பெண்கள் அதிகம்
மோர்ட்ட பைக்கை ஓட்டத் தெரியா
ஆட்கள் மிகவும் அரிது.
பிஸ்னஸ் என்பதே உயிர் மூச்சு-அதன்
பிரதி பலனே இவ் வளர்ச்சி
கஷ்டப்படும் மக்கள் வாழ
காட்டும் அக்கரை தலைமை
காணும் காட்சி பாரு.

மார்க்கப் பிரிவு மூர்க்கத் தனங்கள்
ஊரின் பெயரைக் கெடுக்கும்
வியர்க்கும் சூடு இடத்தின் நெருக்கம்
வேண்டும் மாற்றுத் தீர்வை.
சுனாமி போர்கள் சூறாவளி-பல
சோதனை கண்ட பூமி இது
ஆனாலும் இன்று
அதனை வென்று
அழகாய் இருக்கு பாரு
காத்தான் குடி என்று பேரு.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -