புரவலர் ஹாஸீம் உமர் பங்குகொண்ட கலாமித்ரா விருது விழா!



45 ஆவது ஆண்டில் கால் பதிக்கும் புதிய அலை கலை வட்டம், அதன் கலை இலக்கிய ஊடக மற்றும் சமூக மேம்பாட்டு பணிகளை மேம்படுத்தும் நோக்கோடு அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட அதன் மகளிர் அணியின் ஏற்பாட்டில் கலாமித்ரா விருதுவிழா புதிய அலை கலை வட்டம் அமைப்பின் ஸ்தாபக தினமான 2025.01.30 ஆம் திகதி கல்யான முருகன் மண்டபத்தில் அமைப்பின் ஸ்தாபகர் ராதாமேத்தா அவர்களது தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வுக்கு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் ஆலோசகரும் புரவலர் புத்தக பூங்கா மற்றும் ஹாஸீம் உமர் பௌண்டேசனின் நிறுவுனருமான புரவலர் ஹாஸீம் உமர் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு விருதுகளை வழங்கி வைத்தார்.

கௌரவ அதிதிகளாக தமிழ் நாட்டைச் சேர்ந்த ஊடகவியலாளர் காஞ்சிபுரம் தியாகராஜன், தொழிலதிபர் ஜி. குணசேகரன், தினகரன் பத்திரிக்கையின் பிரதம ஆசிரியர் தெ. செந்தில்வேலர், வீரகேசரி பத்திரிக்கையின் பிரதம ஆசிரியர் ஸ்ரீகஜன், மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் கே.ரி. குருசாமி, சமூகசேவையாளர் அஸீஸ் லஹானா, பிரபல பட்டிமன்ற பேச்சாளர் ஆர். வைத்தமாநிதி, தொழில் அதிபர் ஜே.பி. ஜெயராம் ஆகியோரும்

சிறப்பு அதிதிகளாக சூரியன் எவ்.எம். வானொலி பிரதானி நவநீதன், எக்ஸலண்ட் சர்வதேச பாடசாலை அதிபர் ஸ்ரீவைகுந்தன், சக்தி எவ்.எம்.வானொலி செய்திப் பிரிவு பிரதானி ஆர். கோகுல்நாத், பிரபல நடனக் கலைஞ்ர் டிஸ்கோ ராஜா, கருணாநிதி சிதம்பரம், சபேசன் ஆகியோரும்

விஷேட அதிதிகளாக சமூகசேவகி தானலட்சுமி மாதவன், நடன ஆசிரிகைகளான ரேணுகாதேவி, செல்வராணி, சர்மிலா சுப்ரமணியம், பிரியதர்ஷினி விக்னேஸ்வரன், நதீகா சந்தரன், துவாரஹா ரவீந்த்ரகுமார், சங்கீத ஆசிரியை பகவதி ரமேசன், உள்ளிட்ட பலர் பங்குகொண்டிருந்தனர்.






































 



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :