முற்போக்கு சிந்தனையாளர்கள்,கருத்துக் கூறுபவர்கள்,படித்தவர்கள்,சமூகசேவை செய்பவர்கள் எல்லாம் அரசியல்வாதிகளாக முடியாது என்ற விதி சமூகத்தின் தலைவிதியாக எழுதப்பட்டுள்ளது.மாறாக ஊழல்வாதிகள்,காட்டிக் கொடுப்பவர்கள்,கைநீட்டி காட்டப்பட்டவர்கள் மற்றும் சமூக விரோதிகள் வேஷமிட்டு அரசியல்வாதியாகலாம்.இந்த கரைபடிந்த பாடத்தை நம்மீது துரோகிகள் விதைத்து புனிதமும்,அர்ப்பணிப்பும் உள்ள அரசியலை வியாபாரமாக்கியுள்ளனர்.
அரசியல் என்ற வட்டத்திற்குள் வந்தவர்களால் வெளியே போக முடியாமலும்,உள்ளே வெறும் கையுடன் இருக்கவும் முடியாதுள்ளது.கோடிகளை இழந்தாலும் அரசியலையும் பதவியையும் பாதுகாக்க உச்சகட்ட நிலைக்கு மனிதன் தள்ளப்படுகிறான்.சமூகத்தின் மீதுள்ள அக்கறைக்கு அப்பால் தனது நிரந்தர பங்குச் சந்தை முதலீடாக அரசியலை மாற்றிக் கொள்கிறான்.தான் வாழ்ந்த சமூகத்தில் தனது சுயநலத்துக்காக துரோகியாக மறுபிறப்பு எடுக்கிறான்.இந்தக் கேவலத்தை எந்த அரசியல்மேதையோ,வரலாறுகளோ கற்றுக் கொடுக்கவில்லை.மாறாக இது இடையில் தொற்றிக்கொண்ட கொடிய மனநோய்.
உண்மையில் ஆரம்பத்தில் அரசியல் சதுரங்கத்தில் நுழைய விரும்புவர்கள் பலர் இலட்சியங்களை சுமந்தவர்களே.ஆனால் நுழைந்துவிட்டால் இலட்சியங்களை அடையும் போராட்டத்தில் சிலர் தோல்வியும்..இதனால் பலர் தோல்வியால் துரோகியாகவும் மாறுகின்றனர்.
பதவி,பணம்,கௌரவம் என்பதன் கூட்டாட்சிதான் அரசியல் என்றநிலை ஆகிவிட்டது.இதனால் கொள்கையுடன் வாழ்வதற்கு கற்றுக் கொண்டவன் இந்த அரசியலுக்காக பணத்தையும் துரோகத்தையும் முதலீடு செய்கிறான்.ஆதலால் இதனை சரியான வழியில் அடைய முடியாதவர்கள்/அடைய இயலாமையில் உள்ளவர்கள்/குறுக்கு வழியில் /இலகுவாகவும், அடைய அரசியலை முதலும் & முக்கிய தெறிவுமாக எடுக்கின்றனர்.
அமானிதம்,பொறுப்புவாயந்தது என்று அரசியலை தூய்மையாக நோக்குபவர்கள் அதிகம்.இவர்களுக்கு இறைவன் பதவி,கௌரவம்,பணத்தை நிறைவாக கொடுப்பதால் களஅரசியலை முதலீட்டுச் சந்தையாக பார்ப்பதோ அதற்காக போட்டியிடுவதோ இல்லை.
இன்று ஊரில் பலர் அரசியலுக்கு வருவதற்கு ஆர்வமாகவும் தகுதியாகவும் உள்ளனர்.இவர்களக்கு களம் அமைத்து வாய்ப்புகளையும் வழிகாட்டலையும் வழங்க வேண்டும்.தான் வாழ்கின்ற சமூகத்திற்கு தனக்குரிய இலக்குகளையும் தான் விரும்பும் சிந்தனையையும் சமூகசேவையாக முன்னெடுக்க அதிகாரமிக்க அரசியல் காலத்தின் தேவையே.இதன் மூலம் தூய்மையான அரசியல் என்பதைவிட வியாபாரிகளிடமிருந்து சமூகத்திற்கான அரசியலை மனிதப்பண்புள்ளவர்களிடம் ஒப்படைக்கலாம்.
மாறாக கட்சி மற்றும் நிறவெறி கொண்டு விமர்சிப்பவர்களாகவும்,புத்திமுத்தி ஏலனம்செய்பவர்களாகவும் இருப்பவர்களில் அதிகமானவர்கள் ஏற்கனவே அரசியலில் இருந்தவர்கள்,மீதிப்பேர் அரசியல்வாதிகளின் எழும்புத் துண்டுக்காக வாலாட்டுபவர்கள்.சுயமாக சிந்திக்கவும்,செயற்படவும் இயலாத அங்கவீனர்களாக அதிகமான இளைஞர்கள் மூலச்சலவை செய்யப்பட்டுள்ளனர்.கற்றுக் கொண்ட விடயங்களைவிட தலையாட்டும் கோமாநிலை சடமாக இளைஞர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.தன்னையோ,தான்வாழும் சமூகத்தையோ பற்றிய சிந்தனையில்லாமல் தலைவனுக்கு தருதலையாக மாறியுள்ளனர்.இந்த அரசியல் எந்த நூலும் கற்பிக்கவில்லை.
பலர் அரசியலை நோக்கி திட்டமிட்ட முறையில் பல தலமுறைக்கும் பல்வேறு முயற்சிகளை எடுக்கின்றனர்.ஆனால் சிலருக்கு அரசியல் லொத்தார் அதிஷ்ட சீட்டாக கிடைக்கிறது.நமது ஊரில் அதிகமானவர்களுக்கு பலர்மரணத்தால் போட்ட பிச்சை அதிஷ்டமாக அரசியலைக் கொடுத்துள்ளது.
அரசியல்!!தனிமனிதனை சமூகத்தின் பங்காளராகவும்,பாதுகாவலனாகவும் மாற்றுகிறது.அதை சரியாக முன்னெடுப்பவர்களுக்கு சமூகத்தில் துரோகிப் பட்டமும் செருப்படியும் மறுகரங்களால் வழங்கப்படுகிறது.
அரசியலில் சாதித்த நிறைய மனிதர்கள் மக்களால் போற்றப்படுகின்றனர்.அவர்கள் வரலாறுகளின் கதாநாயகர்களாக உள்ளனர்.அதேநேரம்
அரசியலில் துரோகியாக வாழ்ந்தவர்கள்,,தாம் வாழ்ந்த காலத்துக்கு மட்டுமே பேசப்பட்டது வரலாறு.
இன்று சமூகத்தில் அரசியலில் ஒருவரை அரசியலுக்கு வருமாறு அழைப்பது..விளம்பரம் செய்வது...அழைப்பது போல் முதுகில் குத்தி பின்னால் வலூன் அடிப்பது அதிகம்.இருந்தும்
அரசியலில் மக்களின் தொடர்ச்சியான அழுத்தங்களால் காலசூழ்நிலைக்கேற்ப இடைவெளி நிரப்புபவர்களும் உள்ளனர்.
புதிதாக அரசியலுக்கு மாற்றுத் தலைவர்கள் வந்துவிடவேண்டும் என்ற ஏக்கம் சாதாரண குடிமகனுக்கு உண்டு.ஆனால் இந்த எதிர்பார்ப்புகள் காலத்தின் மாற்றத்தால் ஏற்றுக் கொள்ளப்படுவதில் சிக்கலாகவே உள்ளது.குறிப்பாக இந்த மக்களின் சிந்தனைப் போக்கு,இன்று ஊரில் அரசியலை வைத்து வியாபாரம் நடத்துபவர்களை நித்திரை இல்லாமல் அழைய வைத்துள்ளது.முற்போக்கு சிந்தனையும்,சரியான வழிகாட்டுதலும் உள்ளவர்கள் வந்துவிடுவார்கள் என்ற ஏக்கத்தில் முகநூளில் தான் மட்டுமல்ல தன்னுடன் சிலரை சேர்த்துக்கொண்டு விமர்சனங்களை இடுவது காணக்கூடியதாக உள்ளது.இந்தக் கேவலமான வாழ்க்கையை விட நடுராத்திரி தற்கொலை கௌரவமானது.
களத்தில் நின்று அரசியல் செய்வது மட்டும் அரசியல் அல்ல. அதைச் செய்வதைவிட தூரத்தில் நின்றாலும் களத்தை தனதாக்கி,,,தான்விரும்பும் மாற்றத்தை களத்தில் இருக்கும் இளைஞர்கள் மூலம் அரசியலாக்குவதும் அரசியலே.களங்கப்பட்டு ஊனமாக்கப்பட்ட சமூகத்தில் உண்டாக்கப்படும் மாற்றத்திற்கான சிந்தனையும் அரசியலே.இந்த மாற்றத்தை தனிமனிதன் உள்வாங்கும் போது சமூகத்தில் ஏற்படும் மாற்றம் வரலாறுகாணும் அரசியலாகும்.இதன்மூலம் ஆளுமைமிக்க இளைஞர்களை சமூகத்தின் முன் கொண்டுவரலாம்.இது மிகவும் கடினமான நெடுந்தூரப் பயணம்.இதனை சாதூரியமாக செயற்படுத்துவது தலமுறைக்கு வரலாறு காணும் அரசியலாகும்.இதற்கு நல்ல சமூக சிந்தனையாளனாகவும் அதனை திட்டமிட்டு தூரநோக்குடனும் செயற்படுத்தும் ஆற்றலுள்ளவனாகவும் இருந்தால் போதும்.
ஆகவே அரசியலை வெறுமனே தேர்தல் கேட்பது என்ற கண்ணோட்டத்தில் பர்க்காமல், பல்வேறு ஆக்கபூர்வமான வடிவங்களில் முறைப்படுத்தலாம்.சமூகத்தின் இருப்பு,பாதுகாப்பு,உரிமை,தனித்துவம் மற்றும் ஒற்றுமையை அரசியலின் ஊடாக ஆக்கபூர்வமாக்கலாம்.
சமூகசேவை புரிபவர்கள்,சமூகம் தேடும் இளைஞர்கள் மற்றும் சமூகத்தின் சிந்தனையாளர்கள் எல்லாம் அரசியலுக்கு வந்துவிடுவர் என்ற நடுக்கம் வேஷம்போட்டு தலைவர்களாக இருப்பவர்களுக்கு அதிகமாக உள்ளது. மறுபுறம் இருந்தும் தான்வாழும் சமூககட்டமைப்பில் மாற்றத்தை இலட்சியமாக
உள்ளவர்களுக்கு அதன் வலியும் இதயதுடிப்பும் அதிகமாக உள்ளது.இது முகநூலைவிட ஊரின் பலபக்கங்களிலும் எதிரொலிப்பதைக் காணலாம்.
மாறாக கண்கெட்டவன் பேய் கதைபோல முற்போக்கு சிந்தனையாளர்களை விமர்சனம் செய்வதோ...போலிமுகநூளில் படங்களையிட்டு தரக்குறைவாக பதிவிடுவதோ,ஜீரணிக்க முடியாமல் சுவர்களுக்குள் தலையை முட்டிக் கொண்டு பொறுத்தமற்ற கருத்துக்களை வெளியிடுவதோ ஆரோக்கியமல்ல.இவை அனைத்தும் நாம் வாழ்கின்ற சமூகத்திற்கு நாம் செய்கின்ற துரோகமே.நம்மை பழியாக்கி பதவிக்காக அரசியலை வாழ்நாளுக்கும் சொந்தமாக்கிய துரோகிகளுக்காக நாம் வாழ்ந்த மண்ணுக்கும் சமூகத்திற்கும் துரோகத்திற்கு துணைபோகிறோம்.
ஆகவே அரசியலை அர்த்தமுள்ளதாக கற்போம்.அது நமக்கும் நாம் வாழ்கின்ற சமூகத்திற்கும் நிறைய கற்றுத் தருகின்ற வரலாற்று ஆவணமாகும்.மாறாக பிழையான கண்ணோட்டத்திலும் வழிகாட்டலிலும் நோக்கப்படுவதில் இருந்து தூரமாகுவோம்.ஒருவனின் கருத்துக்களை விமர்சனம் செய்வதைவிடுத்து விதண்டாவாதம் செய்வது மனோவியாதியேஅன்றி அதற்குவேறு பொருள் அரசியல் அகராதியில் இல்லை.
Fahmy Mohamed-UK
MIB:00447870763570
MIB:00447870763570