க.கிஷாந்தன்-
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நோர்வூட் நிவ்வெளிகம பகுதியில் 29.07.2017 அன்று காலை 9 மணியளவில் இடம்பெற்ற கார் விபத்தில் தெய்வாதீனமாக இளைஞர்கள் மூவர் உயிர் தப்பியுள்ளனர்.
குறித்த கார் நுவரெலியாவிலிருந்து இரத்தினபுரிக்கு செல்லும் வழியில் அட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் நோர்வூட் நிவ்வெளிகம பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
எதிரே வந்த பாரவூர்த்திக்கு இடமளிக்க முற்பட்டபோதே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும் காரில் பயணித்த மூவரும் எவ்வித காயங்களுமின்றி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.
இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.