ஆனால்இ அமைச்சர் தொடர்பாக மேலும் பல புதிய தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அத்தகவல்களையும் அண்மையில் லஞ்ச ஊழல் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்க உள்ளேன் என்பதை உங்களுக்குத் தெரியப்படுத்த உள்ளேன்.
எனவே இப்புதிய ஊழல்கள் மற்றும் பழைய ஊழல்கள் என்பவற்றை உடனடியாக விசாரிக்குமாறு லஞ்ச ஊழல் திணைக்களத்திடம் வேண்டிக் கொள்கிறேன்.
இதன் மூலம் இந்நாட்டில் ஜனநாயகம்இ நல்லாட்சி என்பவற்றை மலரச் செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் உரியவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
ஆனால்இ இவ்வமைச்சர் அரசில் அமைச்சராக இருக்கின்ற காரணத்தால்இ விசாரணைகள் இடம்பெறவில்லையா என்கிற சந்தேகம் எனக்கு நிலவுகிறது. ஆகவேஇ இவரை தற்காலிகமாக அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கி விசாரணைகளை மேற்கொள்ளுமாறு இந்நாட்டுப் பிரஜை என்ற முறையில் கோரிக்கையை முன்வைக்கிறேன்.
புதிய ஊழல்கள் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்கும் திகதி மற்றும் நேரம் பின்னர் முன்கூட்டியே அறிவிக்கப்படும்.
இப்படிக்கு
ராஸிக் முஹம்மத் குவைதிர்கான்