மீராவோடை ரிழா பள்ளிவாயலின் மேல்மாடி கட்டிட திறப்பு விழா




எம்.ரீ. ஹைதர் அலி-

கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மீராவோடை பிரதேசத்தில் அமைந்துள்ள ரிழா பள்ளிவாயலின் மிக நீண்டகால தேவைப்பாடாக இருந்துவந்த பள்ளிவாயலின் மேல்மாடி கட்டிடம் ISRC நிறுவனத்தின் நிதி உதவியினால் பூரணப்படுத்தப்பட்டு 2017.07.27ஆந்திகதி - வியாழக்கிழமை பள்ளிவாயல் நிருவாக சபையினரிடம் கையளிக்கப்பட்டது.

அஸர்த் தொழுகையினை தொடர்ந்து மீராவோடை ரிழா பள்ளிவாயலின் தலைவர் அல்ஹாஜ். ஈ.டீ. அப்துல் வாஹிட் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ISRC நிறுவனத்தின் பணிப்பாளர் ஏ.எம். மிஹ்லார் அவர்கள் கலந்துகொண்டு பள்ளிவாயலின் மேல்மாடியினை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வுக்கு கௌரவ அதிதிகளாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கிழக்கு பிராந்திய வக்பு சபை பொறுப்பாளர் அஷ்ஷெய்க். ஏ.எல். ஜூனைட் (நளிமி), மீராவோடை மீரா ஜூம்ஆ பள்ளிவாயலின் தலைவர் கே.பீ.எஸ். ஹமீட், பிரதித்த லைவர் அல்ஹாஜ். எச்.எம். பதுருதீன், அமீர் அலி வித்தியாலயத்தின் அதிபர் எம். மஹ்ரூப் மற்றும் ஏ.பீ.எம். ஜெமீல் உட்பட மஹல்லாவாசிகளும் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -