நல்லாட்சியை ஆதரிக்கும் கணவான்களின் கவணத்துக்கு..!

ந்த நல்லரசாங்கத்தை கொண்டுவர முன்னின்று உழைத்த அசாத்சாலி அவர்கள் அண்மையில் ஒரு ரீவி நிகழ்ச்சியில் கூறிய விடயங்கள், இந்த நல்லரசாங்கம் எந்தளவு இனவாத செயல்பாட்டுக்கு பகிரங்கமாக உதவிசெய்கின்றது என்பதை தெளிவுபடுத்துகின்றது.

அண்மையில் பெசன்பார்க் எறிக்கப்பட்டபோது அந்த ஸ்தாபனத்தில் இருந்த முக்கிய ஆவணமான டிவிஆரை பாதுகாக்க முற்பட்ட அந்த கடையின் ஊழியர் ஒருவரை பொலிசார் கடுமையாக தாக்கி அவரின் கையிலே இருந்த டிவிஆரை பறித்தெடுத்திருந்தனர், அதன் பின் அந்த ஸ்தாபனம் எறிக்கப்பட்ட ஆதாரங்கள் முற்றாக மறைக்கப்பட்டதும் அல்லாமல் அதன் விசாரணைகளும் மூடி மறைக்கப்பட்டது என்றும் அதன் மூலம் அரசாங்கம் எங்களும் பெருத்த அநியாயத்தை செய்துவிட்டது என்றும் கூறியிருந்தார்.

அதேநேரம் மகரகமையில் ஒரு கடை எறிக்கப்பட்டபோது அசாத்சாலி அவர்கள் உடனடியாக செயல்பட்டு அந்த கடையில் இருந்த டிவிஆரை கைப்பற்றி அதனை பொலிசாரின் கையில் கிடைத்துவிடாமல் தடுத்ததாகவும் கூறியிருந்தார்.

அதன் காரணமாகவே அந்த கடையை எறித்த நபரை இனம்காணமுடிந்தது, அதன் பின்தான் வேறுவழியில்லாமல் அரசாங்கம் அந்த குற்றவாளியை கைது செய்தார்கள், அப்படி நாங்கள் இயங்காமல் விட்டிருந்தால் அந்த குற்றவாளியை நிச்சயமாக இந்தரசாங்கம் கைது செய்து நடவடிக்கை எடுத்திருக்காது என்றும் கூறியிருந்தார்.

மற்றுமொரு விடயமாக இந்த ஞானசாராவை கைது செய்ய நான்கு பொலிஸ்குழுக்களை போட்டு தேடிய விடயமானது அரசாங்கத்தின் ஒரு நாடகமே என்றும் இதனை அரசாங்கம் திட்டமிட்டே செய்தது என்றும் பாரிய குற்றச்சாட்டையும் இந்த நல்லரசாங்கத்துக்கு எதிராக முன்வைத்திருந்தார்.

இந்த விடயங்களின்னூடாக என்ன விடயத்தை நாம் அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கின்றது என்றால், இந்த இனவாத செயல்பாடுகளுக்கும், அதனை செயல்படுத்தும் இனவாதிகளையும் இந்த நல்லரசாங்கம்தான் பாராட்டியும் சீராட்டியும் வளர்த்து வருகின்றது என்பது தெளிவாகின்றது.

இந்த இனவாதிகளுக்கு பின்னால் மஹிந்த இருந்தார் என்று கூறிவந்த எம்மவர்களுக்கு இன்று அசாத்சாலி அவர்களின் கூற்றின் மூலம் யார் பகிரங்கமாக ஒத்துழைப்பு வழங்குகின்றார்கள் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

ஆகவே மஹிந்த அரசை வீழ்த்துவதற்காக மேற்குலகுடன் சேர்ந்து சதிசெய்த கூட்டத்தின் கூலிப்படைகளே இந்த இனவாதிகள் என்பது இப்போது தெளிவாகிவிட்டது.

அதற்காக முஸ்லிம்களின் தன்மானத்தில் கைவைத்து விளையாடி வருகின்றது இந்த நல்லரசாங்கம், அதற்கு முஸ்லிம் சமூகமும் பழியாகி வருகின்றது என்பதே வேதனைக்குறிய விடயமாகும்.

இப்படியான விடயங்களை நடுநிலையாக இருந்து முஸ்லிம் புத்திஜீவிகள் அலசி ஆராய்ந்து முஸ்லிம் மக்களுக்கு உண்மை நிலையை தெளிவுபடுத்த முன்வரவேண்டும் என்பதே எங்கள் கருத்தாகும்.

எம்எச்எம்இப்றாஹிம்
கல்முனை...
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -