காணி, சுகாதார பிரச்சினைகளை தீர்க்க கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஆளுநரிடம் கோரிக்கை..!

சப்னி அஹமட்-
கிழக்கு மாகாண சுகாதார, பாதுகாப்பு, காணி மற்றும் கல்வி தொடர்பாக அதிக கரிசனையுடன் அதிகார பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தார்.

கிழக்கு மாகாணத்தில் சுகாதார அமைச்சுக்கு நிறைந்துள்ள சவால்கள் தொடர்பாக கிழக்கு மாகாண சுகாதர அமைச்சர் ஏ.எல். முகம்மட் நஸீர் நேற்று (22) கிழக்கு மாகாணத்தின் ஆளுநர் ரோஹித்த போகல்லாகமையை தனது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டார்.

குறித்த சந்திப்பில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முகம்மட் நஸீரினால், கிழக்கு மாகாண தனது அமைச்சுக்களை பொறுப்பெடுத்ததிலிருந்து தீர்க்க முடியாமல் சில பிரச்சினைகள் காணப்படுகின்றதாகவும் அவைகளை ஆளுநர் என்ற அடிப்படையில் சில நடைசிக்கலில் உள்ள குறைபாடுகளை தீர்பதற்கான கோரிக்கைகளை மேற்கொள்ளுமாறும், சிறுபான்மை சார் காணி மற்றும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.

குறிப்பாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுக்கு சவாலாக உள்ள ஆளனிப்பிரச்சினைகளுக்கான வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பாகவும், வைத்தியர்கள் பற்றாக்குறை தொடர்பாகவும், அரசியலமைப்பில் அதிகாரம் இல்லாத நிலையில் பல விடயங்களை முன்னெடுப்புக்களை மேற்கொள்ள முடியாமை தொடர்பாகவும் இங்கு ஆளுநரிடம் சுட்டிக்காட்டியதை தொடர்ந்து அது தொடர்பாக அதிக ஆர்வம் காட்டி சில பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.

மேலும், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளவுள்ள அபிவிருத்திகளை ஆரம்பித்து வைப்பது தொடர்பான ஆராய்வுகளும் இதன் போது மேற்கொள்ளப்பட்டது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -