இறந்த தனது தாயின் உடலை மூங்கிலில் கட்டி கொண்டு சென்ற அவலம்

புவனேஸ்வரம்: ஒடிசாவில் மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸ் தர மறுத்ததால், இறந்த தனது தாயின் உடலை மூங்கிலில் கட்டி கொண்டு சென்ற அவலம் நடந்தள்ளது.

ஒடிசாவின் கஞ்சம் மாவட்டம் சரோடா கிராமத்தைச் சேர்ந்த பார்பாதி நாயக் என்ற பெண் ஆஸ்துமாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக ஆரம்ப சுகதார நிலையம் ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி கடந்த 4-ம் தேதி இறந்தார். தாயுடன் வந்திருந்த அவரது மகன் சீத்தாராம் நாயக், இறந்த தனது தாயின் சடலத்தை வீட்டிற்கு கொண்டு செல்ல மருத்துவமனை ஆம்புலன்ஸ் தருமாறு கேட்டார். 

ஆனால் இரண்டு மணி நேரம் அவரை அலைகழிக்க வைத்த மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸ் தர மறுத்தது.
வேறு வழியின்றி தனது தாயின் சடலத்தை துணியில் மூட்டை போன்று கட்டி ஒரு மூங்கி கம்பில் கோர்த்து கட்டி உடன் வந்த ஒருவரின் உதவியுடன் தாயின் சடலத்தை கொண்டு சென்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -