மஹிந்த காலத்தில் செய்ததை தனது காலத்தில் செய்ததாக கூறும் பிரதமர் ரணில் அவர்கள்..!

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை(05/07/2017) அன்று ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் அவர்கள் 2014ம் ஆண்டு அளுத்கம சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் இந்த அரசாங்கத்தினால் தற்போது வரையில் எடுக்கப்பட்டுள்ள என்ன ? என்ற கேள்வியை எழுப்பியிருந்தார்.

அதற்கு பதிலளித்து பேசிய பிரதமர் ரணில் அவர்கள் அளுத்கம சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கும் சொத்து சேதங்களுக்கும் உரிய நட்டஈடுகள் வழங்கப்பட்டுள்ளன என்றும், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்றும், அப்பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினரின் நிரந்தர முகாம் ஒன்றும் அமைக்கபபட்டுள்ளது என்றும், அதேபோல் முஸ்லிம்களின் பள்ளிவாசலுக்கோ அல்லது விகாரைகளுக்குகோ சேதம் ஏற்படும் பட்சத்தில் தகுந்த நஸ்டஈடுகளை வழங்குவதே எங்கள் அரசாங்கத்தின் கொள்கையாகவுள்ளது என்றும் கூறினார். 

அந்த விடயங்கள் அனைத்தும் மஹிந்த காலத்தில் செய்யப்பட்ட விடயங்களாகும் என்பதை, பிரதமர் ரணில் அவர்கள் அறிந்து பேசினாரா அல்லது அறியாமல் பேசினாரா என்பது இவ்விடத்தில் கேள்வியாக கேட்கப்படவேண்டிய ஒன்றாக உள்ளது.

பிரதமர் ரணில் அவர்களின் உரையினூடாக நாம் அவதானிக்ககூடிய விடயம் என்னவென்றால்...
அளுத்கம கலவரத்தின் பின் மஹிந்த அரசாங்கத்தினால் பாதிக்கப்பட்ட பல வீடுகளும், பள்ளிவாசல்களும் ராணுவத்தின் உதவி கொண்டு புணர்நிர்மாணம் செய்து கொடுக்கப்பட்டது, அதே நேரம் அந்த கலவரத்தில் பாதிக்கப்பட்ட தனவந்தரான அல்ஹாஜ் ரிஜாஸ் ஹாஜியாரின் வீடும் புதிதாக கட்டிக்கொடுக்கபட்டிருந்தது.

அந்த பகுதி முஸ்லிம்களின் பாதுகாப்புக்காக உடனடியாக தர்காநகர் பக்கத்திலுள்ள வெலிபண்ணை,வலபிட்டிய போன்ற இடங்களிலும் நிரந்தரமான விசேட அதிரடிப்படையினரின் முகாம்களும் அமைத்துக்கொடுக்கப்பட்டன.
இன்னும் பல புணர்நிர்மான விடயங்களுக்கு பலகோடிகள் ஒதுக்கப்பட்டு சேவைகள் நடந்துவரும்போதுதான் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டு மாற்று அரசாங்கம் பதவியை ஏற்றுக்கொண்டது.

முஸ்லிம்களின் ஒட்டுமொத்த ஆதரவையும் பெற்று ஆட்சிக்கு வந்த இந்த நல்லரசாங்கம் இதுவரை அளுத்கமைக்கு ஒதுக்கப்பட்ட நட்டஈட்டு தொகையை கொடுக்கவில்லை என்பதையும், அந்த கலவரத்தின் சூத்திர தாரிகளை இனம்கண்டு தண்டனை வழங்கக்கூட முயற்சிக்கவில்லை என்பதையும் நாம் அறிவோம்.

இதனைத்தான் எஸ்.எம்.மரிக்கார் எம்பி அவர்கள் பாராளுமன்றத்தில் கேள்வியாகவும் கேட்டிருந்தார்.
அதற்கு பதிலளித்து பேசிய பிரதமர் ரணில் அவர்கள், மஹிந்த காலத்தில் செய்யப்பட்ட புணர்நிர்மான விடயங்கள் அனைத்தையும், தனது ஆட்சியில் நடந்தது போன்று பாராளுமன்றத்தில் பதிலளித்து பேசிய விடயம் என்பது ஆச்சரியப்படவைக்கின்ற ஒரு செய்தியாகும்.

மஹிந்தவை பழிவாங்கிவிட வேண்டும் என்ற என்னத்தில் தாஜுதீனின் உடலை தோண்டியெடுத்து தீர்வுகான முற்படும் இந்த நல்லரசாங்கம்.
அளுத்கம வன்செயலை மஹிந்ததான் பின்னாலிருந்து செய்வித்தார் என்ற விடயத்தை தீர விசாரித்து, அதன் மூலம் மஹிந்தவை குற்றவாளியாக காண்பதற்கு ஆயிரம் வழிகள் இருந்தும், அதனை இந்த நல்லரசாங்கம் இதுவரை செய்யாமல் இருப்பதன் மர்மம் என்ன ? என்ற கேள்வியையும் கேட்கவேண்டியுள்ளது.

அதே நேரம் பள்ளிவாசல்கள் பாதிக்கப்பட்டால் உடனடியாக நட்டஈடு வழங்குவோம் என்று கூறும் பிரதமர் ரணில் அவர்கள், தற்போதைய அவருடைய ஆட்சியில் எந்தனை பள்ளிவாசல்கள் இனவாதிகளினால் தாக்கப்பட்டது, இதற்கெல்லாம் அவருடைய அரசாங்கம் நட்டஈடு வழங்கியதை நாம் கேள்விப்படவில்லை.

பிரதமர் ரணில் அவர்களின் இப்படியான கூற்றுக்களை உடனடியாக மறுத்துபேசக்கூட பாராளுமன்றத்தில் முஸ்லிம் உறுப்பினர்கள் யாரும் இல்லாத நிலைதான் காணப்படுகின்றது. இது முஸ்லிம் மக்களுக்கு ஒரு சாபக்கேடுதான் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை எனலாம்.

ஆகவே இந்த நல்லரசாங்கம் முஸ்லிம்கள் விடயத்தில் அலட்சியப்போக்கைத்தான் கடைப்பிடிக்கின்றது என்ற விடயம், சிங்கள இனவாதிகளை திருப்திப் படுத்துவதற்காகவே என்பதுதான் எங்கள் கருத்தாகும்.

பாராளுமன்றத்திலே மற்றவர் செய்தவிடயத்தை நாங்கள்தான் செய்தோம் என்று முக்கியமானவர்கள் பதிலளிப்பது என்பது முஸ்லிம்களை மேலும் மடையனாக்கும் செயல் என்பதை குறிப்பிட்ட தரப்பினர் புரிந்து கொண்டால் நன்றாக இருக்கும் என்பதே எங்கள் கருத்தாகும்.

எம்எச்எம்இப்றாஹிம்
கல்முனை..
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -