பிரதி அமைச்சர் ஹரீஸ் அமெரிக்கா மற்றும் வகாமஸ் நாடுகளுக்கு பயணம்..!

எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்-
விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையிலான குழுவினர் அமெரிக்கா மற்றும் வகாமஸ் நாடுகளுக்கு ஐந்து நாள் விஜயம் மேற்கொண்டு இன்று (15) சனிக்கிழமை நள்ளிரவு பயணமானார்கள். இவ்விஜயத்தின் போது பிரதி அமைச்சர் ஹரீஸ் அமெரிக்காவில் நாட்டின் விளையாட்டுத்துறை அபிவிருத்தி மற்றும் விளையாட்டுக்களின் நுட்பங்கள் குறித்து பல்வேறு தரப்பினரிடம் கலந்துரையாடவுள்ளார்.

மேலும் வகாமஸ் நாட்டில் இடம்பெறவுள்ள 6வது பொதுநலவாய இளைஞர் விளையாட்டு விழாவில் சர்வதேச ஒலிம்பிக் சம்மேளன தலைவரின் அழைப்பை ஏற்று பிரதி அமைச்சர் ஹரீஸ் மேற்படி விளையாட்டு விழாவுக்கு அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -