கல்முனையூர் அப்றாஸ்-
கல்முனை அல்-பஹ்ரியா மகா வித்தியாலயத்தின் கணினி ஆய்வுகூடத்திறப்பு விழாவும் ,ஏ எல் தின விழாவும் பாடசாலை தலமையில்(27) எம்.ஐ அப்துல் ரசாக் தலைமையில் இடம் பெற்றது இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சூதின் கலந்துகொண்டார் மேலும் இவரின் அயாராத முயற்சியினால் முன்னால் கிழக்கு மாகாண கல்வியமைச்சர் விமலவீர திஸ்ஸாநாயக்கவின் நிதி ஓதுக்கிட்டில் இக் கணணித் தொகுதியானது புதிதாக நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கவிடயமாகும்.
மேலும் ஏ.ஏல் விடுகை மாணவர்களின் "பகரம்" நூல் வெளியீடும் இடம் பெற்றது இந் நூலின் முதற்பிரதியினை கல்லூரி அதிபரினால் பிரதம அதிதியிற்கு வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் கௌரவ அதிதியாக வலயக்கல்வி கணக்காளர் கே.றிஸ்வி யஹ்சர் மற்றும் விசேட அதிதியாக தேசாமான்ய ஏ.பி ஜௌபர் மற்றும் பாடாசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் நலன்விரும்பிகள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.