TOP 100 AIRLINES - கட்டார் 1ஆம் இடம் , இலங்கை 81வது இடம்

ர்வதேச ஸ்கை ட்ரெக்ஸ் உலகில் சிறந்த 100 விமான சேவைகளை மதிப்பீடு செய்து அவற்றுக்கு விருது வழங்கும் நிகழ்வை நடத்துகின்றது.அந்த வகையில் 2017ஆம் ஆண்டுக்கான TOP 100 AIRLINES பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது.

அதில் கட்டார் விமான சேவை முதலாம் இடத்தையும் ஸ்ரீலங்கன் விமான சேவை 81ஆவது இடத்தையும் பெற்றுள்ளது.

இதில் கடந்த 2012ஆம் ஆண்டிலிருந்து கட்டார் விமான சேவை மூன்று தடவைகள் முதலாம் இடத்தையும், மூன்று தடவைகள் 2ஆம் இடத்தையும் பிடித்திருந்தது.

மேலும், 2012ஆம் ஆண்டிலிருந்து 2017ஆம் ஆண்டு வரை ஸ்ரீலங்கன் விமான சேவை பிடித்துள்ள இடம் பின்வருமாறு,


2012 - 70ஆம் இடம்
2013 - 68ஆம் இடம்
2014 - 73ஆம் இடம்
2015 - 73ஆம் இடம்
2016 - 67ஆம் இடம்
2017 - 81ஆம் இடம்

இதுவரை கணிக்கப்பட்ட பட்டியலின்படி இந்த வருடமே இலங்கைக்கு பாரியளவிலான பின்னடைவு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -