ஒலிம்பிக் தின நிகழ்வில் - பிரதம அதிதி பிரதி அமைச்சர் ஹரீஸ்

அகமட் எஸ். முகைடீன், ஹாசிப் யாசீன்-
லங்கை, தேசிய ஒலிம்பிக் குழுவின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே. விமலநாதன் தலைமையில் ஒலிம்பிக் தின நிகழ்வு அம்பாறை வீரசிங்க மைதானத்தில் நேற்று (23) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் இலங்கை, தேசிய ஒலிம்பிக் குழுவின் பொதுச் செயலாளர் மெக்ஸ்வெல் பெர்னாண்டோ, கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் பரிசோதகர் சுமித் எதிரிசிங்க, விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் ஐ.பி. விஜயரட்ன, தேசிய ஒலிம்பிக் குழுவின் கல்விப் பணிப்பாளர் பேராசிரியர் பி.எல்.எச். பெரேரா, விமானப் படை, இராணுவம், பொலிஸ் ஆகியவற்றின் கிழக்குமாகாண பிரதாணிகள், இலங்கை, தேசிய ஒலிம்பிக் குழுவின் உறுப்பினர்கள், அம்பாறை மாவட்ட வலயக் கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள் ஆசிரியர்கள், மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். 

ஒலிம்பிக் தினம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும்வகையிலான பாதை யாத்திரையினை விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் ஆரம்பித்து வைத்தார். இப்பாதை யாத்திரையில் பாடசாலை மாணவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டு அம்பாறை நகரை வலம்வந்து வீரசிங்க பொது மைதானத்தை சென்றடைந்ததும் ஒலிம்தின நிழ்வுகள் ஆரம்பமாகியது. 

இதன்போது தேசத்தை பாதுகாக்க உயிர் நீத்த ரணவிருவன் நினைவாக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அத்தோடு ஒலிம் தின நிகழ்வை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கு நடைபெற்ற சித்திரப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வெற்றிக் கிண்ணம் உள்ளிட்ட பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன. இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -